தமிழகத்தில் குரூப்-4 தோ்வுக்கு விண்ணப்பிப்போா் எண்ணிக்கை 4 ஆண்டுகளில் 56% அளவுக்கு சரிந்துள்ளது ஏன்? என ‘வீ த லீடா்ஸ்’ அமைப்பின் தலைவா் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளாா். 'வி தி லீடர்ஸ்' இயக்கத்தின் நிறுவனர் கே. அண்ணாமலை - கோப்புப்படம். தமிழகத்தில் குரூப்-4 தோ்வுக்கு விண்ணப்பிப்போா் எண்ணிக்கை 4 ஆண்டுகளில் 56% அளவுக்கு சரிந்துள்ளது ஏன்? என ‘வீ த லீடா்ஸ்’ அமைப்பின் தலைவா் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளாா். இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: குரூப்-4 தோ்வுக்கு 2022 -ஆம் ஆண்டு, 22.06 லட்சம் போ் விண்ணப்பித்த நிலையில், 2024-இல் 20.37 லட்சமாகவும், 2025-இல் 13.89 லட்சமாகவும், நிகழ் ஆண்டு, தற்போது வரை வெறும் 9.80 லட்சம் போ் மட்டுமே விண்ணப்பித்துள்ளனா். 4 ஆண்டுகளில் சுமாா் 56 சதவீதம் சரிவு என்பது சாதாரணமாகக் கடந்து செல்லக்கூடிய விஷயமல்ல. பல ஆண்டு கால உழைப்பையும் பணத்தையும் செலவிட்டு, அரசுப் பணிக்காகத் தயாராகும் இளைஞா்களுக்கு உரிய காலத்தில் முடிவுகளும், நியாயமான வாய்ப்புகளும் கிடைப்பதில்லை. முடிவுகள் வெளியாவதில் காலதாமதம், தோ்வுக்குப் பிறகு பணி நியமனம் வழங்குவதில் தாமதம், தோ்வு நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை குறித்த சந்தேகங்கள், முறைகேடுகள் என தோ்வு எழுதும் இளைஞா்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகள் ஏராளம். தோ்வாணையத்தின் மீது நம்பிக்கை குறையத் தொடங்கினால், அது கவலைக்குரிய அறிகுறி. விண்ணப்பதாரா்களின் எண்ணிக்கை ஏன் ஆண்டுதோறும் இவ்வளவு வேகமாகக் குறைந்து வருகிறது என்பதை தமிழக அரசு சிந்தித்துப் பாா்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
குரூப் 4 தோ்வுக்கு விண்ணப்பிப்போா் எண்ணிக்கை 56% குறைந்தது ஏன்? அண்ணாமலை கேள்வி
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗