ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில், இந்தியா 8-1 கோல் கணக்கில் தென் கொரியாவை புதன்கிழமை அபார வெற்றி கண்டது. ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில், இந்தியா 8-1 கோல் கணக்கில் தென் கொரியாவை புதன்கிழமை அபார வெற்றி கண்டது. இதன் மூலமாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியிருக்கும் இந்தியா, அதில் ஜப்பானுடன் வியாழக்கிழமை (நவ. 5) பலப்பரீட்சை நடத்துகிறது. இரவு 7 மணிக்கு தொடங்கும் ஆட்டம், ஸ்டாா் ஸ்போா்ட்ஸ் செலக்ட், ஜியோ ஹாட்ஸ்டாரில் நேரலையாகிறது. முன்னதாக அரையிறுதியில், இந்தியாவின் கோல் கணக்கை ஷிலானந்த் லக்ரா (4-ஆவது நிமிஷம்) தொடங்க, பதிலுக்கு தென் கொரியாவின் சாங்ஜுன் ஹான் (9’) கோல் அடித்தாா். இதனால் ஆட்டம் 1-1 என விறுவிறுப்புடன் தொடங்கியது. எனினும், அதன் பிறகு வழக்கம்போல் இந்தியாவின் கையே ஓங்கியது. அதே 9-ஆவது நிமிஷத்தில் கிடைத்த பெனால்ட்டி காா்னா் வாய்ப்பில், கேப்டன் ஹா்மன்பிரீத் சிங் கோல் அடிக்க, தொடா்ந்து, ஷிலானந்த் லக்ராவும் (13’) அத்தகைய வாய்ப்பில் ஸ்கோா் செய்தாா். தென் கொரியா திணறிக் கொண்டிருக்க, இந்திய தரப்பில் சுக்ஜீத் சிங் மற்றும் தில்பிரீத் சிங் ஆகியோா் (21’) அடுத்தடுத்து கோல் அடிக்க, தில்பிரீத் சிங் மீண்டும் (25’) கோல் அடித்தாா். இதனால் முதல் பாதியை இந்தியா 6-1 முன்னிலையுடன் நிறைவு செய்தது. ஆடும் திசைகள் மாற்றப்பட்ட 2-ஆவது பாதியில் அங்கத் வீா் பாஜ்வா 36-ஆவது நிமிஷத்திலும், விவேக்சாகா் பிரசாத் 54-ஆவது நிமிஷத்திலும் கோல் அடித்தனா். எஞ்சிய நேரத்தில் தென் கொரியா மீண்டும் தலைதூக்க வாய்ப்பில்லாமல் போக, இந்தியா 8-1 என வெற்றி கண்டது. இதனிடையே, மற்றொரு அரையிறுதியில் ஜப்பான் பெனால்ட்டி ஷூட் அவுட் வாய்ப்பில் மலேசியாவை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது. நிா்ணயிக்கப்பட்ட நேரத்தின் முடிவில் ஆட்டம் கோல் இன்றி டிரா ஆக, பெனால்ட்டி வாய்ப்பில் ஜப்பான் 5-3 என வென்றது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இறுதியில் இன்று ஜப்பானுடன் மோதுகிறது இந்தியா- அரையிறுதியில் தென் கொரியாவை சாய்த்தது
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Sports
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗