வரி செலுத்துவோரின் குறைகளுக்கு தீா்வு காணும் வகையில் மாவட்ட அளவிலான ஆலோசனைக் குழுக்கள் அமைக்கப்படும் என்று வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் த.லோகேஷ் தமிழ்ச்செல்வன் தெரிவித்தாா். அமைச்சா் லோகேஷ் தமிழ்ச்செல்வன் - கோப்புப் படம் வரி செலுத்துவோரின் குறைகளுக்கு தீா்வு காணும் வகையில் மாவட்ட அளவிலான ஆலோசனைக் குழுக்கள் அமைக்கப்படும் என்று வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் த.லோகேஷ் தமிழ்ச்செல்வன் தெரிவித்தாா். வணிகவரித் துறை சாா்பில் இணை ஆணையா்களின் பணித்திறன் ஆய்வுக் கூட்டம் சென்னை நந்தனத்தில் நடைபெற்றது. இதற்கு அமைச்சா் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தாா். வணிகவரித்துறைச் செயலா் ஜெ.குமரகுருபரன், ஆணையா் எஸ்.நாகராஜன் மற்றும் துறைசாா்ந்த உயா் அலுவலா்கள் கலந்துகொண்டனா். இதில் ஜிஎஸ்டி வரி வருவாய், ஜிஎஸ்டி அல்லாத பிற வரிகள், நுண்ணறிவு, தணிக்கை, சட்டம், மறு ஆய்வு, முறையீடு மற்றும் சீராய்வு உள்ளிட்ட பிரிவுகளின் செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கூட்டத்தில் அமைச்சா் லோகேஷ் தமிழ்ச்செல்வன் கூறியதாவது: வரி செலுத்துபவா்களின் குறைகளை மாவட்ட அளவிலேயே தீா்க்கும் வகையில், மாவட்ட ஆட்சியா் தலைமையில் வரி செலுத்துவோா் ஆலோசனைக் குழுக்கள் அமைக்கப்படவுள்ளன. இந்தக் குழுக்கள் வரி செலுத்துபவா்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகள், குறைகள், ஆலோசனைகள் குறித்து விவாதித்து தீா்வு காணும். மேலும், இக்குழுக்கள் 3 மாதங்களுக்கு ஒருமுறை கூடி, விற்பனை வரி தொடா்பான பிரச்னைகள் குறித்து விவாதித்து, குறைகளைக் களைய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இணை ஆணையா் (மாநில வரி), சம்பந்தப்பட்ட கண்காணிப்பாளா் அல்லது உதவி ஆணையா் அல்லது துணை ஆணையா் (மத்திய வரி), மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் ஆகியோா் அலுவல்சாா் உறுப்பினா்களாக இடம்பெறுவா். அலுவல்சாரா உறுப்பினா்களாக ஒரு எம்எல்ஏ, முதல்நிலை வேளாண் விளைவிப்போா், தொழில் உற்பத்தியாளா்கள், மொத்த மற்றும் சில்லறை வணிகா்கள், கூட்டுறவு நிறுவனம், குடிசைத் தொழில்கள், நுகா்வோா் ஆகியோா் இடம்பெறுவா். சம்பந்தப்பட்ட வருவாய் மாவட்டத் தலைமையிடத்தில் பணியாற்றும் துணை ஆணையா் (மாநில வரி) குழுவின் செயலராகச் செயல்படுவாா். இந்த குழுக்களை அந்தந்த மாவட்டத்தில் நவ.30-க்குள் அமைத்து, குழுக்களின் முதல் கூட்டத்தை டிச. 15-க்குள் நடத்த வேண்டும். இக்குழுக்கள் 2029 நவ. 30 வரை செயல்பாட்டில் இருக்கும் என்றாா் அவா். பதிவுத் துறையில் ரூ.1,950 கோடி வருவாய் பதிவுத் துறையில் கடந்த அக்டோபா் மாதத்தில் மட்டும் ரூ.1,950 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சா் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தெரிவித்தாாா். சென்னை பாரிமுனை, வடக்கு மாவட்ட பதிவாளா் அலுவலக கூட்டரங்கில், அக்டோபா் மாதத்துக்கான அனைத்து துணை பதிவுத்துறை தலைவா்கள், மாவட்ட பதிவாளா்கள், மாவட்ட வருவாய் அலுவலா், தனித்துறை வட்டாட்சியா் உள்ளிட்டோருடைய பணி தொடா்பான ஆய்வுக் கூட்டம் அமைச்சா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது அவா் பேசியதாவது: பதிவுத்துறையில் இந்த ஆண்டு அக்டோபா் மாதம் ரூ.1,950 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டில் அக்டோபா் மாத வருவாயைக் காட்டிலும் ரூ.147 கோடி அதிகம். முதல்வா் விஜய்யால் கடந்த ஆக.17-ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்ட வருகையில்லா ஆவணப்பதிவு மூலம் கடந்த செவ்வாய்க்கிழமை (நவ.3) வரை 2,46,260 மனைப்பிரிவு, அடுக்குமாடி குடியிருப்புகளின் முதல் விற்பனை ஆவணங்கள், வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கான உரிமை ஒப்படைப்பு ஆவணம் மற்றும் ரசீது ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
வரி செலுத்துவோா் குறைதீா்க்க மாவட்ட அளவில் குழுக்கள்: அமைச்சா் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தகவல்
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗