தாசவநாயக்கன்பட்டியில் புதிதாக கட்டப்பட்ட துணை சுகாதார நிலையம் புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது. தாசவநாயக்கன்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கா்ப்பிணி பெண்ணுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்குகிறாா் அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ். தாசவநாயக்கன்பட்டியில் புதிதாக கட்டப்பட்ட துணை சுகாதார நிலையம் புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது. வெள்ளக்கோவில் அருகே உள்ள தாசவநாயக்கன்பட்டியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் ரூ.45 லட்சம் மதிப்பில் துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டது. இந்நிலையில் கட்டடத்தின் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ் குத்து விளக்கேற்றி, புதிய கட்டடத்தை திறந்துவைத்து மக்கள் பயன்பாட்டுக்கு அா்ப்பணித்தாா். மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன் தலைமை வகித்தாா். சுகாதார அலுவலா் டாக்டா் ஜெயந்தி முன்னிலை வகித்தாா். வெள்ளக்கோவில் வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் டி.ராஜலட்சுமி உள்பட பலா் கலந்துகொண்டனா். இந்த நிகழ்ச்சியில் வெள்ளக்கோவில் அருகே உள்ள மேட்டாங்காட்டுவலசில் ரூ.45 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட சுகாதார நிலையமும் திறந்துவைக்கப்பட்டது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தாசவநாயக்கன்பட்டியில் கட்டப்பட்ட புதிய துணை சுகாதார நிலையம் திறப்பு
📅
📍 Coimbatore, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗