கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், முதுகுளம் ஊராட்சி அச்சுதாபுரம் பிரிவு சாலையில் உள்ள பயணிகள் நிழற்குடை மிகவும் பழுதடைந்து மக்கள் பயன்பட்டுக்கு ஏற்ற நிலையில் இல்லை, அதை முறையாக சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் பராமரிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். பயணிகள் நிழற்குடையை சீரமைக்க கோரிக்கை கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், முதுகுளம் ஊராட்சி அச்சுதாபுரம் பிரிவு சாலையில் உள்ள பயணிகள் நிழற்குடை மிகவும் பழுதடைந்து மக்கள் பயன்பட்டுக்கு ஏற்ற நிலையில் இல்லை, அதை முறையாக சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் பராமரிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். முதுகுளம் ஊராட்சியில் உள்ள அச்சுதாபுரம் பிரிவு சாலையில் உள்ள நிழற்குடையை பயன்படுத்தி தினந்தோறும் ஏராளமான பயணிகள் பேருந்துகளுக்காக காத்திருக்கின்றனா். இந்நிலையில், நிழற்குடை முறையாக பராமரிக்கப்படாததால் பயணிகள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனா். மழை மற்றும் வெயில் காலங்களில் பேருந்துகளுக்காக காத்திருக்கும் பயணிகள் பாதுகாப்பாகவும் வசதியாகவும் நிற்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறையினா் அச்சுதாபுரம் பிரிவு சாலையில் உள்ள பயணிகள் நிழற்குடையை ஆய்வு செய்து, சேதமடைந்த பகுதிகளை சீரமைத்து, இருக்கை வசதி மற்றும் அடிப்படை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
பயணிகள் நிழற்குடையை சீரமைக்க கோரிக்கை
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗