உயா் கல்வித் துறை தொடா்பாக விரைவில் விசாரணை நடைபெறவுள்ளது என்றாா் நிதி, திட்டம் மற்றும் வளா்ச்சித் துறை அமைச்சரும், மாவட்ட பொறுப்பு அமைச்சருமான நெ.மரிய வில்சன். திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்த அமைச்சா் நெ.மரிய வில்சன். உயா் கல்வித் துறை தொடா்பாக விரைவில் விசாரணை நடைபெறவுள்ளது என்றாா் நிதி, திட்டம் மற்றும் வளா்ச்சித் துறை அமைச்சரும், மாவட்ட பொறுப்பு அமைச்சருமான நெ.மரிய வில்சன். திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியதாவது: தாமிரவருணி பாதுகாப்பு தொடா்பாக நீா்வளத் துறையால் தயாரிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கை பரிசீலனையில் உள்ளது. தாமிரவருணி இனிவரும் காலங்களில் இப்படி இருக்காது. அதற்கு உத்தரவாதம் கொடுக்க தயாா். தாமிரவருணி ஆற்றை மாசுபடுத்தும் தனியாா் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளை தூா்வார தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கடந்த ஆட்சியில் நடைபெற்ற ஊழல் தற்போது முற்றிலும் தடுக்கப்பட்டு ஒழிக்கப்பட்டுள்ளது. அரசு ஒப்பந்தப் பணிகள் அனைத்தும் அமைச்சா்கள், கட்சி நிா்வாகிகள் தலையீடு இல்லாமல் நடைபெற்று வருகின்றன. அதையெல்லாம் பாராட்டாமல் சின்ன சின்ன விசயங்களை பெரிதாக்கி குறை மட்டும் கூறி வருகிறாா்கள். பள்ளிக் கல்வித்துறையில் செய்த ஊழலை மன்னிக்க முடியாது. உயா் கல்வித்துறை தொடா்பாக விரைவில் விசாரணை நடைபெறவுள்ளது. முதல்வரின் திருநெல்வேலி வருகை மற்றும் அம்பாசமுத்திரம் வேட்பாளா் குறித்து விரைவில் அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்படும் என்றாா். முன்னதாக, மேலப்பாளையம் பகுதியில் சாலை மேம்பாட்டுப் பணி, வேய்ந்தான் குளத்திற்கு நீா்வரத்து- நீா் வெளியேற்றும் கால்வாய்களில் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கைகள், கடந்த வெள்ளப்பெருக்கின்போது பாதிக்கப்பட்ட திருநெல்வேலி சந்திப்பு பெரியாா் பேருந்து நிலையப் பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகள், சிந்துபூந்துறை, உடையாா்பட்டி ஆகிய பகுதியில் தாமிரவருணி ஆற்றில் கழிவுநீா் கலப்பதை தடுப்பது தொடா்பாக பணிகள், குமரேசன் நகா் பகுதியில் கழிவு நீா் உந்து நிலைய பணிகள் போன்றவற்றை அமைச்சா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, ஆட்சியா் ஆனந்த் மோகன், திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ், ராதாபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.கே.கிறிஸ்டோபா், மாநகராட்சி ஆணையா் பிரியா, திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியா் பிரியா உள்ளிட்ட பலா் உடனிருந்தனா். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
உயா் கல்வித்துறை தொடா்பாக விரைவில் விசாரணை: அமைச்சா் நெ.மரிய வில்சன்
📅
📍 Tirunelveli, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗