குடியரசுக் கட்சியின் தோல்விக்குப் பின்னால் இருக்கும் 5 முக்கியக் காரணங்கள்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: bbc.com (original report) ↗
குடியரசுக் கட்சியின் தோல்விக்குப் பின்னால் இருக்கும் 5 முக்கியக் காரணங்கள்

பட மூலாதாரம், Getty Images அமெரிக்க இடைக்காலத் தேர்தலில், ஜனநாயகக் கட்சியினர் பெரும் வெற்றியைப் பெற்று, நாடாளுமன்றத்தைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். பொதுவாக, அமெரிக்க இடைக்காலத் தேர்தல்களில் ஆளும் கட்சி பின்னடைவைச் சந்திப்பது வழக்கம். ஆனால், இந்த முறை குடியரசுக் கட்சி சந்தித்துள்ள தோல்வி வழக்கமான பின்னடைவைக் காட்டிலும் அதிகமானது. டொனால்ட் டிரம்ப் அதிபராகப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அவரது ஆட்சிக்கு எதிரான மக்களின் அதிருப்தி இந்தத் தேர்தல் முடிவுகளில் வெளிப்பட்டுள்ளதாகப் பார்க்கப்படுகிறது. வாக்காளர்களின் அதிருப்தி முதல் டிரம்பின் சரிந்து வரும் செல்வாக்கு வரை குடியரசுக் கட்சியின் தோல்விக்குக் காரணமான ஐந்து முக்கியக் காரணங்கள் என்ன? பட மூலாதாரம், Reuters அமெரிக்கா முழுவதும் அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாக்காளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. முக்கியத் தொகுதிகளில் இந்தக் கோபத்தை நேரடியாகப் பார்க்க முடிந்தது. "பெட்ரோல் விலை, மளிகைப் பொருட்களின் விலை என எல்லாமே உயர்ந்து கொண்டிருக்கின்றன" என்று வடக்கு கரோலினாவை சேர்ந்த பெண் ஒருவர் தேர்தலுக்கு முன்பு பிபிசியிடம் தெரிவித்தார். இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சிக்கு வாக்களிப்பதைத் தவிர்த்து, ஜனநாயகக் கட்சிக்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். செப்டம்பர் வரையிலான ஓராண்டில் அமெரிக்காவில் விலைவாசி 3.7% உயர்ந்துள்ளது. எரிபொருள் மற்றும் எரிசக்தி விலைகள் அதிகரித்ததே இதற்கு முக்கியக் காரணம். அரசாங்க தரவுகளின்படி, செப்டம்பரில் ஒரு கேலன் டீசலின் சராசரி சில்லறை விலை 6.52 டாலர் என்று இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியிருந்தது. அக்டோபர் தொடக்கத்திலும் டீசல் விலை ஏறக்குறைய அதே அளவில் இருந்தது. கடந்த ஓராண்டில் பணவீக்கம் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மிதமான அல்லது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியதாக 79% வாக்காளர்கள் கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளனர். மேலும், வழக்கத்தைவிட விலைவாசி உயர்ந்ததற்கு அதிபர் டிரம்பின் கொள்கைகளே காரணம் என்று 10இல் ஆறுக்கும் மேற்பட்டோர் (60%) குற்றம் சாட்டியுள்ளனர். End of அதிகம் படிக்கப்பட்டது பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு விலைவாசி உயர்வுக்கு முக்கியக் காரணங்களில் ஒன்றாக இரான் உடனான போர் அமைந்தது. பிப்ரவரி மாதத்தில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து இரான் மீது போரைத் தொடங்கின. இதற்குப் பதிலடியாக, உலகின் கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) போக்குவரத்துக்கு முக்கிய வழித்தடமாக இருக்கும் ஹோர்மூஸ் நீரிணையை இரான் மூடியது. இதனால் எரிபொருள் விலைகள் வேகமாக உயர்ந்தன. அதன் தாக்கத்தை அமெரிக்க மக்கள் பெட்ரோல் நிலையங்களில் தொடர்ந்து எதிர்கொண்டு வருகின்றனர். இந்தப் போரை பெரும்பாலான அமெரிக்கர்கள் ஆதரிக்கவில்லை. குறிப்பாக, டிரம்பின் 'முதலில் அமெரிக்கா' (America First) என்ற தேர்தல் வாக்குறுதியை நம்பிய அவரது ஆதரவாளர்களுக்கு இது ஏமாற்றத்தை அளித்தது. இனி போர்கள் இருக்காது என்று டிரம்ப் வாக்குறுதி அளித்திருந்த நிலையில், இரானுடனான போர் அந்த வாக்குறுதிக்கு முரணாக அமைந்தது. அமெரிக்கா இரான் மீது ராணுவ நடவடிக்கை எடுத்தது தவறான முடிவு என்று 63% வாக்காளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் நான்கில் மூன்று பேர் (74%), நாடாளுமன்றத் தேர்தலில் தாங்கள் யாருக்கு வாக்களிப்பது என்பதைத் தீர்மானிப்பதில் இரான் போர் முக்கியப் பங்கு வகித்ததாகத் தெரிவித்துள்ளனர். மேலும், நாடாளுமன்றத் தேர்தலில் தங்களது வாக்கைத் தீர்மானிப்பதில் இரான் போர் முக்கியக் காரணமாக இருந்ததாக வாக்காளர்களில் நான்கில் மூன்று பேர் (74%) கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளனர். தேர்தலுக்கு மறுநாள் பேசிய அதிபர் டிரம்ப், குடியரசுக் கட்சியின் தோல்விக்கு இரான் போரும் ஒரு காரணமாக இருந்ததை ஒப்புக் கொண்டார். இருப்பினும், இரான் அணு ஆயுதத்தைப் பெறுவதைத் தடுக்க ராணுவ நடவடிக்கையில் இறங்குவதைத் தவிர அமெரிக்காவுக்கு வேறு வழியில்லை என்று ஃபாக்ஸ் நியூஸ் நேர்காணலில் அவர் தெரிவித்தார். ஜனநாயகக் கட்சியினர் இவ்வளவு பரவலான வெற்றியைப் பெறுவதற்கு, வலுவான வேட்பாளர்களும் முக்கியக் காரணமாக இருந்தனர். குறிப்பாக, பாரம்பரியமாக குடியரசுக் கட்சிக்கு ஆதரவளிக்கும் பகுதிகளிலும் அவர்கள் வாக்காளர்களைக் கவர்ந்தனர். விலைவாசி உயர்வு, சுகாதார சேவைகளைப் பெறுவதிலுள்ள சிக்கல்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் தங்களது பிரசாரத்தை முன்னெடுத்தனர். முன்னாள் ஆசிரியரான ஜேம்ஸ் தலாரிகோவும், பாதிரியார் ஆடம் ஹாமில்டனும் தங்களது மத நம்பிக்கைகள் குறித்தும் வெளிப்படையாகப் பேசினர். அவர்களின் இந்த அணுகுமுறையே டெக்சாஸ் மற்றும் கன்சாஸ் மாகாண வாக்காளர்களிடம் வரவேற்பைப் பெற்றது. தெற்கு கரோலினாவில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் அன்னி ஆண்ட்ரூஸ் எதிர்பாராத வெற்றியைப் பெற்றார். குழந்தைகள் நல மருத்துவராகப் பணியாற்றிய அவர், அனைவருக்கும் கட்டுப்படியாகும் சுகாதார சேவை கிடைக்க வேண்டும் என்பதைத் தனது பிரசாரத்தின் முக்கிய அம்சமாக முன்வைத்தார். அமெரிக்காவின் சுகாதாரக் கட்டமைப்பு சீர்குலைந்துள்ளதாகப் பலரும் கருதும் சூழலில் அவரது பிரசாரம் வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது. மிச்சிகனில் வெற்றி பெற்று அந்தத் தொகுதியை ஜனநாயகக் கட்சி தக்கவைக்க வழிவகுத்த அப்துல் எல்-சயீத், "அரசியலில் பணத்தின் ஆதிக்கத்தை ஒழித்து, மக்களின் கைகளில் பணம் சேர வேண்டும்" என்பதை முக்கிய முழக்கமாக முன்வைத்தார். ஜார்ஜியாவில் மீண்டும் செனட் உறுப்பினராகத் தேர்வான ஜனநாயகக் கட்சியின் ஜான் ஒசாஃப், விலைவாசி உயர்வு மற்றும் ஊழலைத் தனது பிரசாரத்தின் மையமாக வைத்திருந்தார். 2024 தேர்தலில் இரண்டு முறை டிரம்புக்கு ஆதரவளித்த ஒரு மாகாணத்தில், 39 வயதான ஒசாஃப் எளிதாக வெற்றி பெற்றிருப்பது, 2028 அதிபர் தேர்தலில் அவர் போட்டியிடலாம் என்ற ஊகங்களுக்கு மேலும் வலுசேர்த்துள்ளது. ஜனநாயகக் கட்சியினரின் பிரசாரத்தை அதிபர் டிரம்ப்கூட பாராட்டினார். அவர்கள் "சிறப்பாகச் செயல்பட்டனர்" என்று ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறினார். இதற்கு மாறாக, டெக்சாஸின் கென் பாக்ஸ்டன் உள்ளிட்ட சில குடியரசுக் கட்சி வேட்பாளர்கள், வாக்காளர்களின் உண்மையான பிரச்னைகளில் போதிய கவனம் செலுத்தாத வகையில் தங்களது பிரசாரத்தை முன்னெடுத்ததாக விமர்சிக்கப்பட்டனர். வாக்காளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்திய முக்கியமான இரண்டு விவகாரங்களான விலைவாசி உயர்வும் இரான் போரும் டிரம்புடன் நேரடியாகத் தொடர்புடையவை. குடியரசுக் கட்சி ஆதரவாளர்கள் மத்தியிலேயே டிரம்புக்கான ஆதரவு குறைந்திருந்தது. இதனால், 2024 தேர்தலில் அவருக்கு ஆதரவளித்த சில மாகாணங்கள் இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சியினருக்கு மிகவும் சவாலானவையாக மாறின. தனது ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தும் முயற்சியாக, இந்தத் தேர்தலில் தானே போட்டியிடுவதாக நினைத்துக் கொண்டு வாக்களிக்குமாறு டிரம்ப் கேட்டுக்கொண்டார். ஆனால், அமெரிக்க அரசியலில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மையப் புள்ளியாக இருந்து வரும் டிரம்பின் அரசியல் செல்வாக்கு மங்கத் தொடங்கியிருப்பதையே இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டுவதாகச் சிலர் கருதுகின்றனர். வாக்காளர்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்திருந்த சூழலில், குடியரசுக் கட்சியின் தேர்தல் பிரசாரத்தில் தனது பெயரையும் பிம்பத்தையும் டிரம்ப் முன்னிறுத்தி நடத்தியது ஆபத்தான முடிவாக அமைந்தது. அது எதிர்பார்த்த பலனைத் தராமல், கட்சிக்குப் பின்னடைவையே ஏற்படுத்தியுள்ளது. தேர்தலுக்கு முன்பு வெளியான கருத்துக் கணிப்புகள், விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு குறித்த தங்களது கவலைகளுக்கு டிரம்ப் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென ஏராளமான அமெரிக்கர்கள் விரும்பியதைக் காட்டின. ஆனால், திங்கள்கிழமை வாஷிங்டன் டிசியில் நடந்த தனது இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், தனக்குப் பின்னால் இருந்த ரிஃப்ளெக்டிங் பூல் (Reflecting Pool) பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சர்ச்சைக்குரிய புனரமைப்புப் பணிகள் குறித்தே டிரம்ப் நீண்ட நேரம் பேசினார். பட மூலாதாரம், Reuters இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஹிஸ்பானிக் மற்றும் கறுப்பின வாக்காளர்களில் ஒரு பகுதியினர் குடியரசுக் கட்சியை நோக்கி நகர்ந்தது டிரம்பின் தீர்க்கமான வெற்றிக்கு உதவியது. ஆனால், இந்த இடைக்காலத் தேர்தலில் அந்தப் போக்கு மீண்டும் மாறியிருப்பதாகத் தெரிகிறது. டெக்சாஸ் - மெக்சிகோ எல்லையை ஒட்டிய, ஹிஸ்பானிக் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளிலும் ஜனநாயகக் கட்சியினர் வெற்றி பெற்றனர். 2024 அதிபர் தேர்தலுடன் ஒப்பிடுகையில், ஹிஸ்பானிக் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மாவட்டங்களில் குடியரசுக் கட்சியின் செனட் வேட்பாளர்களுக்கான ஆதரவு 22%-க்கும் அதிகமாகக் குறைந்துள்ளது என்று நியூயார்க் டைம்ஸ் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவின் பிற முக்கிய மக்கள் பிரிவுகளுடன் ஒப்பிடும்போது இதுவே மிகப் பெரிய மாற்றம் என்று தரவு செய்தியாளர் ஜெஃப் அடெல்சன் தெரிவித்துள்ளார். குடியேற்ற அமலாக்க நடவடிக்கைகள் மீதான பரவலான அதிருப்திக்கு மத்தியில் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. அமெரிக்க குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்கத் துறை (ICE) குறித்து 56% அமெரிக்கர்கள் எதிர்மறையான கருத்தைக் கொண்டிருப்பதாக பியூ ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. அதேபோல, கறுப்பின மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மாவட்டங்களிலும் செனட் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு கணிசமாக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் கறுப்பின வாக்காளர்கள் அதிகமுள்ள மாகாணமான மிஸ்சிசிப்பியில் செனட் தேர்தல் கடும் போட்டியாக மாறியுள்ளது. அங்கு மொத்த வாக்காளர்களில் சுமார் 37% பேர் கறுப்பின மக்கள். ஸ்காட் கோலம் வெற்றி பெற்றால், 1982ஆம் ஆண்டுக்குப் பிறகு மிஸ்சிசிப்பியில் இருந்து செனட்டுக்கு தேர்வாகும் முதல் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் என்ற பெருமையைப் பெறுவார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை