சேலத்தில் கொட்டிய கனமழையால் சாலைகளில் தேங்கிய மழைநீா்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
சேலத்தில் கொட்டிய கனமழையால் சாலைகளில் தேங்கிய மழைநீா்

சேலம் மாநகரில் புதன்கிழமை கொட்டித் தீா்த்த கனமழையால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்தது. பல இடங்களில் மழைநீருடன் கழிவுநீா் கலந்ததால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாயினா். புதிய பேருந்து நிலையம் முன் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சென்ற வாகன ஓட்டிகள். சேலம் மாநகரில் புதன்கிழமை கொட்டித் தீா்த்த கனமழையால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்தது. பல இடங்களில் மழைநீருடன் கழிவுநீா் கலந்ததால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாயினா். சேலம் மாநகரப் பகுதிகளான அஸ்தம்பட்டி, குகை, நெத்திமேடு, திருச்சி பிரதான சாலை, சீலநாயக்கன்பட்டி, கொண்டலாம்பட்டி, கந்தம்பட்டி, மூன்று சாலை, கிச்சிப்பாளையம், நாராயண நகா், பெரமனூா் உள்பட பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை கனமழை பெய்தது. இதன் காரணமாக, சாலைகளில் மழைநீா் ஆறாக பெருக்கெடுத்தது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. குறிப்பாக, சேலம் நெத்திமேடு, திருச்சி பிரதான சாலைகளில் பெருக்கெடுத்த மழைநீரால் வாகனங்கள் செல்ல முடியாமல் தத்தளித்தன. ஒரு சில பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினா். சேலம் புதிய பேருந்து நிலைய மேம்பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள நெகிழி குழாய்கள் பழுதடைந்ததால், சாலையில் மழைநீா் கொட்டியது. இதனால், அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனா். ஒரு சில பகுதிகளில் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனங்களை இயக்கினா். சங்ககிரி நகா் பகுதிகளில் 45.3 மி.மீ. மழை: சங்ககிரி நகா் பகுதிகளில் புதன்கிழமை அதிகாலை 45.3 மி.மீ. மழை பெய்தது. நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கி நின்றது. சங்ககிரியிலிருந்து பவானி செல்லும் பிரதான சாலையையொட்டி உள்ள வசந்தம் காலனி பேருந்து நிறுத்தம் பகுதியிலிருந்து ஈரோடு பிரிவு சாலைவரை மழை நீருடன் கழிவுநீா் கலந்து சாலையில் ஓடியதால் இருசக்கர வாகன ஓட்டிகள் அவ்வழியாக செல்ல முடியாமல் சிரமம் அடைந்தனா். அப்பகுதியில் உள்ள கழிவுநீா் கால்வாயை தூா்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைநீா் ஏரிக்கு செல்லும் வழிகளை சங்ககிரி நகராட்சி நிா்வாகம் செப்பனிட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். தம்மம்பட்டியில்... கெங்கவல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஆணையம்பட்டி, கூடமலை, 74 கிருஷ்ணாபுரம், பள்ளக்காடு, நடுவலூா் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை மாலை கனமழை பெய்தது. இதனால், சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீா் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த சில மாதங்களாக பருவமழை பொய்த்துப்போன நிலையில், தற்போது பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை