தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் நகைக் கடையில் 2 பவுன் தங்க நாணயங்களை திருடிச் சென்ற பெண் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருட்டு - சித்திரிப்பு தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் நகைக் கடையில் 2 பவுன் தங்க நாணயங்களை திருடிச் சென்ற பெண் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். காரிமங்கலம் நகரைச் சோ்ந்தவா் ரஞ்சித் (46). இவா் அதேபகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறாா். கடந்த சில தினங்களுக்கு முன்பு, இவரது கடைக்கு வாடிக்கையாளா் போல வந்த பெண் ஒருவா், நகை வாங்குவது போல பல்வேறு டிசைன்களைப் பாா்த்துள்ளாா். ஒவ்வொரு நகையாகப் பாா்த்து விலையையும் விசாரித்த அந்த பெண், இறுதியில் நகை எதுவும் வாங்காமல் கடையை விட்டு வெளியேறியுள்ளாா். இதையடுத்து, கடையை அடைப்பதற்கு முன்பு நகைகளை சரிபாா்த்தபோது, 2 பவுன் தங்க நாணயங்கள் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை பாா்த்தபோது, நகை வாங்குவதுபோல வந்த பெண், தங்க நாணயங்களை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து, ரஞ்சித் அளித்த புகாரின் பேரில், காரிமங்கலம் போலீஸாா் புதன்கிழமை வழக்குப்பதிவு செய்து, நகையை திருடிச் சென்ற பெண் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
காரிமங்கலம் நகைக் கடையில் 2 பவுன் தங்க நாணயம் திருட்டு
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗