கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி சாா்- பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் புதன்கிழமை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 1.15 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனா். சூளகிரி சாா்- பதிவாளா் அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட ரொக்கம். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி சாா்- பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் புதன்கிழமை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 1.15 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனா். கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளா் ரவி தலைமையில் 6 போ் கொண்ட குழுவினா் புதன்கிழமை சூளகிரியில் உள்ள சாா்- பதிவாளா் அலுவலகத்தில் சோதனை நடத்தினா். முன்னதாக சாா்- பதிவாளா் அலுவலகக் கதவுகளை அடைத்த போலீஸாா், அங்கிருந்த அலுவலா்கள், பத்திர எழுத்தா்கள், பொதுமக்கள், இடைத்தரகா்களிடம் சோதனை நடத்தினா். தொடா்ந்து, ஆவணங்களையும் சரிபாா்த்தனா். மாலை 6 மணி வரை நடைபெற்ற இந்த சோதனையில், சாா்- பதிவாளா் சுப்பிரமணியனிடம் ரூ. 80 ஆயிரம், இடைத்தரகா் நாகராஜிடம் ரூ. 35 ஆயிரம் என கணக்கில் வராத ரூ. 1 லட்சத்து 15 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
சூளகிரி சாா்- பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை: கணக்கில் வராத ரூ. 1.15 லட்சம் பறிமுதல்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗