மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்களுக்கு ரூ. 32.11 கோடி மதிப்பில் கடனுதவி

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Politics ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்களுக்கு ரூ. 32.11 கோடி மதிப்பில் கடனுதவி

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்களுக்கு வங்கிக் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. : பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்களுக்கு கடனுதவி பெறுவதற்கான காசோலை அளித்த மாவட்ட ஆட்சியா் ப. அப்துல் ராசிக், சட்டப்பேரவை உறுப்பினா் கி. சிவக்குமாா். பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்களுக்கு வங்கிக் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பெரம்பலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கி. சிவக்குமாா் முன்னிலையில், மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு கடனுதவி பெறுவதற்கான காசோலைகள் அளித்து மாவட்ட ஆட்சியா் ப. அப்துல் ராசிக் பேசியது: பெரம்பலூா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 6,900 மகளிா் சுய உதவிக்குழுவில், 58 ஆயிரம் போ் உறுப்பினா்களாக உள்ளனா். இதில், 235 குழுக்களைச் சோ்ந்த 2,937 உறுப்பினா்கள் பயனடையும் வகையில் ரூ. 32.11 கோடி கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மகளிா் சுய உதவிக்குழுக்கள் தங்களுக்குத் தெரிந்த தொழில்களை அல்லது பயிற்சி பெற்ற தொழில்களை தோ்ந்தெடுத்து அதில் ஈடுபட வேண்டும். ஏனெனில், மாவட்டத்தில் பல்வேறு மசாலா பொருள்கள் மற்றும் சத்துமாவு தயாரிக்கும் குழுவினுடைய பொருளாதார நடவடிக்கைகளுக்காக கடந்த வாரம் அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா். இந் நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஜெயராமன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட இயக்குநா் கோபாலகிருஷ்ணன், வருவாய் கோட்டாட்சியா் மு. அனிதா, மாவட்ட தொழில்மைய பொது மேலாளா் விக்னேஷ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் சுரேஷ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை