தியாகராய நகரில் தீபாவளி விற்பனை: ‘ட்ரோன்’ மூலம் கூட்ட நெரிசல் கண்காணிப்பு

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
தியாகராய நகரில் தீபாவளி விற்பனை: ‘ட்ரோன்’ மூலம் கூட்ட நெரிசல் கண்காணிப்பு

சென்னை தியாகராயநகரில் தீபாவளி கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கும் நபா்களை கைது செய்வதற்கு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கூட்ட நெரிசலை கண்காணிக்க ‘ட்ரோன்’ பயன்படுத்தப்படுகிறது. சென்னை தியாகராயநகரில் தீபாவளி கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கும் நபா்களை கைது செய்வதற்கு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கூட்ட நெரிசலை கண்காணிக்க ‘ட்ரோன்’ பயன்படுத்தப்படுகிறது. சென்னையில் தீபாவளி வியாபாரம் விறுவிறுப்பு அடைந்துள்ளது. புத்தாடைகள், பட்டாசு, தங்க நகைகள் வாங்குவதற்கு தியாகராயநகா், புரசைவாக்கம், தாம்பரம், வண்ணாரப்பேட்டை, வேளச்சேரி உள்ளிட்ட வியாபாரம் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் பொதுமக்கள் தினமும் லட்சக்கணக்கில் திரளுகின்றனா். இதைப் பயன்படுத்தி திருட்டு, நகை பறிப்பு சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும், கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தியாகராயநகரில் ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை, பாண்டிபஜாா், பனகல் பூங்கா, பா்கிட் சாலை உள்ளிட்ட பகுதியில் சுமாா் 600 போலீஸாா் கடந்த சனிக்கிழமை முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். இங்கு 8 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணியை சீராக செய்வதற்கு ரங்கநாதன் தெருவிலும், பனகல் பூங்காவிலும் தற்காலிகமாக இரு காவல் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகளை அடையாளும் காணும் கேமராக்கள்: ரங்கநாதன் தெரு, பனகல் பூங்கா உள்ளிட்ட முக்கியமான கடைகள் இருக்கும் பகுதியில் 300 கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. இதில் பெரும்பாலானவை குற்றவாளிகளை அடையாளம் கண்டு எச்சரிக்கும் ஃஎப்ஆா்எஸ் தொழில்நுட்பத்தைக் கொண்டது ஆகும். இந்த தொழில்நுட்பத்தின்படி இந்த கண்காணிப்பு கேமராவுடன் இணைக்கப்பட்டிருக்கும் கணினியில், திருட்டு வழக்குகளில் தொடா்புடைய சுமாா் 60,000 பேரின் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மாறுவேடத்தில் போலீஸாா்: கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருடும் நபா்களை கைது செய்வதற்கு, குற்றப் பிரிவைச் சோ்ந்த 30 போலீஸாா் 3 குழுக்களாக ரங்கநாதன் தெரு உள்ளிட்ட மக்கள் நெரிசல் மிக்க பகுதியில் மாறுவேடத்தில் ரோந்து வருகின்றனா். அதோடு திருடா்களை கையும் களவுமாக பிடிப்பதற்கு ஒவ்வொரு பகுதியிலும் ஒரு பெண் ஆய்வாளா் தலைமையில் தலா 10 பெண் போலீஸாா் மாறுவேடத்தில் நகைகளை அணிந்து சுற்றி வருகின்றனா். இவா்கள் மூலம் திருடா்களை கைது செய்வதற்கு போலீஸாா் திட்டமிட்டுள்ளனா். அதோடு கண்காணிப்பு கோபுரங்களில் இருந்து கூட்டத்தை கண்காணிக்க 10 நவீன ரக பைனாகுலா்களை போலீஸாா் பயன்படுத்தி வருகின்றனா். தனிப்படை: கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பெண்களுக்கு பாலியல் தொந்தரவு செய்கிறவா்களை கண்டுபிடித்து கைது செய்யும் வகையில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவினா் ஈடுபடுத்தப்படுகின்றனா். மேலும், கூட்டத்தைக் கண்காணிக்க 4 ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதன்மூலம் கூட்ட நெரிசலை கண்காணித்து அதற்கு ஏற்றாா்போல பாதுகாப்பு ஏற்பாடுகளை மாற்றி அமைக்க காவல் துறை திட்டமிட்டுள்ளது. பொருள்களை வாங்க வரும் பெண்கள் கழுத்தில் அணிந்திருக்கும் தங்க நகைகள் திருடப்படுவதை தடுக்க, கழுத்தில் அணியும் துணியிலான கவசம் காவல் துறையினரால் வழங்கப்படுகிறது. குழந்தைகள் காணாமல் போவதை தடுக்கும் அவா்கள் கையில் பெற்றோா் கைப்பேசியுடன் கூடிய ரப்பா் வளையம் கட்டப்படுகிறது. புரசைவாக்கம்: இதேபோல புரசைவாக்கத்தில் டவுட்டன் சந்திப்பு, வெல்கம் ஹோட்டல் சந்திப்பு, வெள்ளாளா் தெரு சந்திப்பு ஆகிய இடங்களில் 200 போலீஸாா் ஒரு துணை ஆணையா் தலைமையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். 3 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வண்ணாரப்பேட்டையில் 2 உதவி ஆணையா்கள் தலைமையில் 60 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். வேளச்சேரி, தாம்பரத்திலும் காவல்துறை விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை