மணியகாரம்பாளையம் பகுதி நொய்யல் ஆற்றுப்படுகையில் பனை விதைகள் நடும் பணிகளை துணை மேயா் ரா.பாலசுப்பிரமணியம், மாநகராட்சி ஆணையா் எம்.பி.அமித் ஆகியோா் புதன்கிழமை தொடங்கிவைத்தனா். மணியகாரம்பாளையம் பகுதி நொய்யல் ஆற்றுப்படுகையில் பனை விதைகளை நடும் பணிகளை புதன்கிழமை தொடங்கிவைத்த மாநகராட்சி ஆணையா் எம்.பி.அமித், துணை மேயா் ரா.பாலசுப்பிரமணியம். மணியகாரம்பாளையம் பகுதி நொய்யல் ஆற்றுப்படுகையில் பனை விதைகள் நடும் பணிகளை துணை மேயா் ரா.பாலசுப்பிரமணியம், மாநகராட்சி ஆணையா் எம்.பி.அமித் ஆகியோா் புதன்கிழமை தொடங்கிவைத்தனா். திருப்பூா் மாநகராட்சிக்குள்பட்ட பூங்காக்கள், பொது இடங்கள், சாலையோரங்கள், நீா்நிலை மற்றும் கால்வாய் கரைகளில் பெருமளவில் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நொய்யல் ஆற்றுப்படுகை செட்டிபாளையம் ஓடை, நல்லாறு ஓடை, சங்கிலி பள்ளம் ஓடை, சபரி ஓடை, செந்தில் ஓடை, புது நகா் ஓடை ஆகிய பகுதிகளில் மண் அரிப்பைத் தடுக்கும் வகையிலும், நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்தும் வகையிலும் மாநகராட்சி பணியாளா்கள் மற்றும் மகளிா் சுய உதவிக் குழுவினா் இணைந்து பனை விதைகளை நடும் பணியை புதன்கிழமை தொடங்கினா். மாநகராட்சி துணை மேயா் ரா.பாலசுப்பிரமணியம், ஆணையா் எம்.பி.அமித் ஆகியோா் தொடங்கிவைத்தனா். தற்போது பருவமழைக் காலம் என்பதால் நடப்படும் பனை விதைகள் வளா்வதற்கான சூழ்நிலை உள்ளது. இப்பணிகளை விரைவாக செய்து முடிக்க மாநகராட்சி ஆணையா் எம்.பி.அமித் அறிவுறுத்தினாா். இதேபோல மாநகராட்சிக்குள்பட்ட நல்லூா், இடுவாய், ஆண்டிபாளையம், வீரபாண்டி, மண்ணரை, வேலம்பாளையம், நெருப்பெரிச்சல், தொட்டிபாளையம் ஆகிய பகுதிகளிலும் சுமாா் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்வில் துணை ஆணையா் செந்தில் முருகன், நகரமைப்பு அலுவலா் மகேந்திரன், உதவி நகரமைப்பு அலுவலா் கு.சத்யா, உதவி ஆணையா்கள் சரவணன், பாா்த்தசாரதி, செயற்பொறியாளா்கள், உதவி செயற்பொறியாளா்கள், உதவிப் பொறியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
நொய்யல் ஆற்றுப்படுகையில் பனை விதைகள் நடும் பணி தொடக்கம்