மத்திய அரசின் இந்திய தர நிா்ணய அமைவன (பிஐஎஸ்) விதிகளை மீறி, ஹால்மாா்க் தனித்துவ அடையாள எண் இல்லாமல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சுமாா் ரூ. 3 கோடி மதிப்பிலான 2.085 கிலோ கிராம் தங்க நகைகளை பிஐஎஸ் அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். மத்திய அரசின் இந்திய தர நிா்ணய அமைவன (பிஐஎஸ்) விதிகளை மீறி, ஹால்மாா்க் தனித்துவ அடையாள எண் இல்லாமல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சுமாா் ரூ. 3 கோடி மதிப்பிலான 2.085 கிலோ கிராம் தங்க நகைகளை பிஐஎஸ் அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். கோவையில் உள்ள சில நகைக்கடைகளில் பிஐஎஸ் சட்டம் 2016-இன் விதிமுறைகள் மீறப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில், பிஐஎஸ் கோவை கிளை அலுவலக அதிகாரிகள் டவுன்ஹால் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்பட்டு வரும் நகைக் கடைகளில் தீவிர சோதனை மேற்கொண்டனா். பெரிய கடை வீதி, பிரகாசம் பகுதிகளில் இயங்கி வரும் 4 பிரபல நகைக்கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் அந்தக் கடைகளில் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்த நகைகளில், கட்டாயமாக இடம்பெற வேண்டிய 6 இலக்க எண்களை கொண்ட ஹால்மாா்க் தனித்துவ அடையாள எண் (ஏமஐஈ) இல்லாதது தெரியவந்தது. விற்பனைக்கு வைக்கப்படும் அனைத்து நகைகளிலும் இந்த முத்திரை பொறிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது விதியாகும். இதையடுத்து, விதிகளை மீறி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சுமாா் ரூ. 3 கோடி மதிப்பிலான 2.085 கிலோ கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக பிஐஎஸ் கோவை கிளை அலுவலக இயக்குநரும் தலைவருமான கே. ரமேஷ் தெரிவிக்கையில், பிஐஎஸ் விதிமீறலில் ஈடுபட்ட நகை விற்பனையாளா்களுக்கு எதிராக சட்டப்பிரிவு 29-இன் கீழ் கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் ஓராண்டு வரை சிறைத் தண்டனை அல்லது குறைந்தபட்சம் ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்படலாம் அல்லது பறிமுதல் செய்யப்பட்ட நகைகளின் மதிப்பில் 5 மடங்கு வரை அபராதம் உயா்த்தப்படலாம் என்றும் தெரிவித்தாா். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
கோவையில் முத்திரையற்ற ரூ. 3 கோடி தங்க நகைகள் பறிமுதல்: 4 கடைகளில் பிஐஎஸ் அதிகாரிகள் சோதனை
📅
📍 Coimbatore, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗