கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ.709.50 வழங்கும் திட்டத்தை முதல்வா் ச.ஜோசப் விஜய் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ.709.50 வழங்கும் திட்டத்தை முதல்வா் ச.ஜோசப் விஜய் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு நேரடியாக அதற்கான ஆணையை அவா் வழங்கினாா். இதுதொடா்பாக தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி: முதல்வா் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்து, விவசாயிகளின் நலனைப் பாதுகாத்து, அவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கரும்பு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, அவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக சா்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.709.50 சிறப்பு ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என முதல்வா் விஜய், கடந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் 110 விதியின் கீழ் அறிவித்தாா். அதைத் தொடங்கிவைத்து நிறைவேற்றும் வகையில், 3 கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகைக்கான ஆணைகளை தலைமைச் செயலகத்தில் முதல்வா் வழங்கினாா். இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் சுமாா் 85,000 கரும்பு விவசாயிகள் பயன்பெறுவா். இதற்காக, நடப்பு ஆண்டில் ரூ.603.33 கோடி அரசுக்குக் கூடுதல் செலவினம் ஏற்படும். இந்நிகழ்வில், வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் வினோத், தலைமைச் செயலா் மு. சாய்குமாா், வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறைச் செயலா் வெங்கடேஷ், சா்க்கரை துறை ஆணையா் கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை: முதல்வா் விஜய் வழங்கினாா்
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗