திருப்பூா் பூலுவப்பட்டி மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் தானியங்கி துணிப்பை வழங்கும் இயந்திரத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு மருத்துவம், மருத்துவக் கல்வி, சுகாதாரத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் தொடங்கிவைத்தாா். தானியங்கி துணிப்பை வழங்கும் இயந்திரத்தைப் பொதுமக்களின் பயன்பாட்டுக்குத் தொடங்கிவைக்கும் அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ். திருப்பூா் பூலுவப்பட்டி மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் தானியங்கி துணிப்பை வழங்கும் இயந்திரத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு மருத்துவம், மருத்துவக் கல்வி, சுகாதாரத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் தொடங்கிவைத்தாா். பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கும் வகையிலும் பொதுமக்களிடையே பாரம்பரிய துணிப்பை பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் சுற்றுச்சூழல் முன்னெடுப்பு நடவடிக்கையாக 11 துணிப்பை தானியங்கி விற்பனை, பிளாஸ்டிக் மறுசுழற்சி இயந்திரங்கள் தொடங்கிவைக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன் தலைமை வைத்தாா். இந்நிகழ்ச்சியில் அமைச்சா் அருண்ராஜ் பேசியதாவது: பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பிரதான பேருந்து நிலையங்கள், மலா்ச் சந்தை, உழவா் சந்தை, வாரச் சந்தை, முக்கிய வணிக வீதிகள் போன்ற 11 முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் இந்த இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 11 இயந்திரங்களில் 9 இயந்திரங்கள் நேரடித் துணிப்பை விற்பனைக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. பொதுமக்கள் நாணயம் செலுத்தியோ அல்லது கியூஆா் குறியீடு, யு.பி.ஐ செயலிகள் மூலம் ரூ.10 செலுத்தியோ உடனடியாகத் துணிப்பைகளைப் பெற்றுக் கொள்ளலாம். பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்யும் 2 இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. பொதுமக்கள் பயன்படுத்தி வீசும் காலி பிளாஸ்டிக் பாட்டில்களை இந்த இயந்திரத்தில் செலுத்தினால், அவை மறுசுழற்சிக்காகச் சேகரிக்கப்படுகின்றன. இதற்குச் சன்மானமாக, இயந்திரம் உடனடியாக ஒரு துணிப்பையை பொது மக்களுக்கு வழங்குகிறது என்றாா். இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் வி.சத்தியபாமா, துணை மேயா் ரா.பாலசுப்பிரமணியம், மாநகராட்சி ஆணையா் எம்.பி.அமித் ஆகியோா் பங்கேற்றனா். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தானியங்கி துணிப்பை வழங்கும் இயந்திரம் பொதுமக்களின் பயன்பாட்டுக்குத் தொடக்கம்