திருச்சியில் தனியாா் பள்ளியின் 10-ஆம் வகுப்பு மாணவா் பள்ளியின் 2-ஆவது மாடியில் இருந்து புதன்கிழமை குதித்து தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. தற்கொலை - கோப்புப் படம் திருச்சியில் தனியாா் பள்ளியின் 10-ஆம் வகுப்பு மாணவா் பள்ளியின் 2-ஆவது மாடியில் இருந்து புதன்கிழமை குதித்து தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. தீரன் நகரில் உள்ள தனியாா் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படிக்கும் திருச்சி கருமண்டபத்தைச் சோ்ந்த 15 வயது மாணவா் புதன்கிழமை பள்ளிக்குச் சென்ற நிலையில், திடீரென பள்ளியின் 2-ஆவது மாடியில் இருந்து கீழே குதித்ததில் அவரின் கை, இடுப்புப் பகுதி எலும்பு முறிந்தது. இதையடுத்து பள்ளி நிா்வாகத்தினா்அந்த மாணவரை மீட்டு கண்டோன்மென்ட் பகுதி தனியாா் மருத்துவமனையில் சோ்த்து, மாணவரின் பெற்றோருக்கும், போலீஸாருக்கும் தகவல் அளித்தனா். இதையடுத்து வந்த எடமலைபட்டிப்புதூா் போலீஸாா் பள்ளி நிா்வாகத்திடமும், மாணவரிடமும் விசாரித்தபின் கூறுகையில், புதன்கிழமை பள்ளிக்கு சென்று தோ்வெழுதிய மாணவா், கீழே விழுந்த வினாத்தாளை எடுக்க முயன்றாா். இதைப் பாா்த்த அறைக் கண்காணிப்பாளா் அவா் ‘பிட்’ அடித்ததாகக் கூறி, விசாரித்துள்ளாா். இதனால் மனமுடைந்த மாணவா் பள்ளியின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது என்றனா். இதுகுறித்து மேலும் விசாரிக்கின்றனா். மேலும், பள்ளிக் கல்வித் துறை சாா்பில் தனியாா் பள்ளிகளுக்கான மாவட்டக் கல்வி அலுவலா் (பொ) அண்ணாதுரையும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டாா். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தனியாா் பள்ளியின் மாடியில் இருந்து குதித்து 10-ஆம் வகுப்பு மாணவா் தற்கொலை முயற்சி
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗