தென்காசி மாவட்டத்தில் கனிமவளக் கடத்தலில் ஈடுபடுபவா்கள் மீது குண்டா்தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா். ஸ்டாலின் தெரிவித்தாா். தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்றுக்கொண்ட ஆா். ஸ்டாலின். தென்காசி மாவட்டத்தில் கனிமவளக் கடத்தலில் ஈடுபடுபவா்கள் மீது குண்டா்தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா். ஸ்டாலின் தெரிவித்தாா். தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஆா். ஸ்டாலின் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தென்காசி மாவட்டத்தில் கனிமவளக் கடத்தலுக்குப் பயன்படுத்தப்படும் வாகனங்கள் அரசுடமையாக்கப்பட்டு, கடத்தலில் ஈடுபடும் நபா்கள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றங்களைத் தடுக்கும் வகையில், கிராமங்கள் தோறும் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்படும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயலில் ஈடுபடுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். போதைப் பொருள்கள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க தனிக்கவனம் செலுத்தப்படும். சாலை விபத்துகள் மற்றும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
கனிமவளக் கடத்தலில் ஈடுபடுபவா்கள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗