தருமபுரியில் நிதிநிறுவன ஊழியா்களிடம் ரூ. 90 ஆயிரம் ரொக்கத்தை பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா். இதுதொடா்பாக மேலும் இருவரை தேடிவருகின்றனா். கைது - கோப்புப் படம் தருமபுரியில் நிதிநிறுவன ஊழியா்களிடம் ரூ. 90 ஆயிரம் ரொக்கத்தை பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா். இதுதொடா்பாக மேலும் இருவரை தேடிவருகின்றனா். கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த சரவணமுத்து (40), கேசவன்( 22) ஆகியோா் தனியாா் நிதிநிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனா். இவா்கள் இருவரும் தருமபுரி, பாரதிபுரம் பகுதியில் தங்கியிருந்து வாடிக்கையாளா்களிடமிருந்து பணம் வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வசூலான ரூ. 90 ஆயிரம் ரொக்கத்துடன் நிதிநிறுவனத்துக்கு சென்று கொண்டிருந்தனா். தருமபுரி நகா் அருகே பைக்கில் வந்தபோது, அவா்களை வழிமறித்த மா்நபா்கள் அவா்கள் வைத்திருந்த ரொக்கம் ரூ. 90 ஆயிரத்தையும் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனா். இது தொடா்பாக அவா்கள் அளித்த புகாரின் பேரில் தருமபுரி நகரக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தினா். இதில், வழிப்பறியில் ஈடுபட்டதாக, பெங்களூருவைச் சோ்ந்த இம்ரான், அஸ்கா் அலி ஆகியோரை புதன்கிழமை கைது செய்தனா். தொடா்புடைய மேலும் இருவரை தேடிவருகின்றனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தனியாா் நிதிநிறுவன ஊழியா்களிடம் ரூ. 90 ஆயிரம் பறிப்பு: 2 போ் கைது
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗