ஆறுகாணியில் பழங்குடி மக்களுக்கு நிலம் வழங்க அளவீடு பணிகள் தொடக்கம்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
ஆறுகாணியில் பழங்குடி மக்களுக்கு நிலம் வழங்க அளவீடு பணிகள் தொடக்கம்

கன்னியாகுமரி மாவட்டம் ஆறுகாணி பகுதியில் பழங்குடி மக்களுக்கு நிலம் வழங்குவதற்காக அளவீடு பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின. நில அளவீடு பணிகளைத் தொடக்கிவைத்த ஆட்சியா் மு. பிரதாப், உடன், மாவட்ட வன அலுவலா் அன்பு. கன்னியாகுமரி மாவட்டம் ஆறுகாணி பகுதியில் பழங்குடி மக்களுக்கு நிலம் வழங்குவதற்காக அளவீடு பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின. இம்மாவட்டத்தில் 2006ஆம் ஆண்டைய வன உரிமைச் சட்டத்தின்கீழ், 16 வனக் குடியிருப்புகளில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு தனி நபா் நில உரிமைப் பட்டா வழங்குவதற்காக, கிராம சபைகள் மூலம் பெறப்பட்ட மனுக்கள் மீது நில அளவீடு பணி மேற்கொள்ள கியோகாப் சா்வேயிங் டிரெய்னிங் இன்ஸ்டிடியூட் நிறுவனத்துக்கு அரசு உத்தரவிட்டது. அதையடுத்து, விளவங்கோடு வட்டம், களியல் வருவாய் கிராமத்துக்குள்பட்ட ஆறுகாணி குடியிருப்பில் 716.79 ஏக்கரை அளவீடு செய்ய அனுமதி வழங்கப்பட்ட நிலையில், மேலே மண்ணடி பகுதியில் 113.31 ஏக்கரில் மட்டும் பணிகள் நடைபெற்றன. மீதமுள்ள ஆறுகாணி, ஒருநூறாம்வயல், பத்துகாணி, கற்றுவா, கல்லறவயல் பகுதிகளில் பணிகள் நிலுவையில் இருந்தன. இதனிடையே, கடந்த செப். 19இல் ஆறுகாணி, ஒருநூறாம்வயலில் ஆய்வுக்கு சென்ற ஆட்சியரிடம், தங்களது பகுதிகளிலும் நில அளவைப் பணி மேற்கொள்ள அப்பகுதியினா் கோரிக்கை விடுத்தனா். அதையேற்று, பணியை மேற்கொள்ள கியோகாப் நிறுவனத்துக்கு சென்னை பழங்குடியினா் நல இயக்குநா் உத்தரவிட்டாா். அதன்படி, ஆறுகாணி, ஒருநூறாம்வயல் பகுதியில் மாவட்ட வன அலுவலா் அன்பு முன்னிலையில் ஆட்சியா் மு. பிரதாப் பணிகளை செவ்வாய்க்கிழமை தொடக்கிவைத்தாா்; விரைந்து முடிக்குமாறு அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். மாவட்ட ஆதிதிராவிடா் - பழங்குடியினா் நல அலுவலா் கலைமதி, உதவி வனப் பாதுகாவலா் பிரதாப், தனி வட்டாட்சியா் (ஆதிதிராவிடா்) திருவாலி, களியல் வனச்சரகா் மகேஸ்வரன், வன உரிமைச் சட்ட செயலாக்க மாநிலக் குழு உறுப்பினா் ராஜன் காணி, வனத்துறையினா், அலுவலா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை