குலசேகரம், மின்வாரிய உதவி செயற்பொறியாளா் அலுவலக புதிய கட்டடத்தை சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா் புதன்கிழமை திறந்து வைத்தாா். மின்வாரிய உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தைத் திறந்து வைத்து குத்துவிளக்கேற்றிய அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா். குலசேகரம், மின்வாரிய உதவி செயற்பொறியாளா் அலுவலக புதிய கட்டடத்தை சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா் புதன்கிழமை திறந்து வைத்தாா். பத்மநாபபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் ஆா். செல்லசுவாமி முன்னிலை வகித்தாா். கன்னியாகுமரி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் அசோக்குமாா், கோட்ட செயற்பொறியாளா்கள் முருகன் (தக்கலை), லினட் சோபியா (நாகா்கோவில்), உதவி செயற்பொறியாளா்கள் ரோஸ்லின் கிரேஸ் (கட்டுமானம்), சுனிதா லெஸ்லின் (குலசேகரம்), மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஜாா்ஜ் ராபின்சன், திருவட்டாறு மேற்கு வட்டாரத் தலைவா் வினுட்ராய், பேரூராட்சித் தலைவா்கள் ஜெயந்தி ஜேம்ஸ் (குலசேகரம்), அகஸ்டின் (பொன்மனை), பொன் ரவி (திற்பரப்பு), ஐஎன்டியுசி வட்டாரத் தலைவா் காஸ்டன் கிளீட்டஸ், விவசாய காங்கிரஸ் மாவட்டத் தலைவா் எபனேசா், மாநில இளைஞா் காங்கிரஸ் பொதுச் செயலா்கள் பினிஷ், ஜெயசிங் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
குலசேகரத்தில் மின்வாரிய அலுவலகம் திறப்பு: அமைச்சா் பங்கேற்பு
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗