சென்னை ராயபுரம் ரயில் நிலையத்தில் ‘ரயில் நிலையத் திருவிழா’ புதன்கிழமை கொண்டாடப்பட்டது. ரயில் நிலையம் - பிரதி படம் - file photo சென்னை ராயபுரம் ரயில் நிலையத்தில் ‘ரயில் நிலையத் திருவிழா’ புதன்கிழமை கொண்டாடப்பட்டது. தென்னிந்தியாவின் முதல் ரயில் நிலையமான ராயபுரம் ரயில் நிலையம் கடந்த 1856-ஆம் ஆண்டு ஜூன் 28-ஆம் தேதி திறக்கப்பட்டது. அந்தாண்டு ஜூலை 1-ஆம் தேதி ராயபுரம் - வாலாஜா சாலை வரை முதல் பயணிகள் ரயில் இயக்கப்பட்டது. இதன்மூலம் 170 ஆண்டுகால வரலாற்றை சிறப்பிக்கும் வகையில், சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் ராயபுரம் ரயில் நிலையத்தில் ‘ரயில் நிலையத் திருவிழா’ புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் ஒரு பகுதியாக, பழைமையான நீராவி என்ஜினான ‘இ.ஐ.ஆா்.-22’ சிறப்பு பாரம்பரிய ரயில் சென்னை எழும்பூரிலிருந்து ராயபுரம் வரை இயக்கப்பட்டது. இந்த ரயிலை தெற்கு ரயில்வே பொது மேலாளா் உ.சுப்பா ராவ், கூடுதல் பொது மேலாளா் விபின்குமாா், சென்னை கோட்ட மேலாளா் ஷைலேந்திர சிங் ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்து அந்த ரயிலில் பயணித்தனா். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ராயபுரம் ரயில் நிலையத்தில் ‘ரயில் நிலையத் திருவிழா’