தீபாவளிப் பண்டிகை கூட்ட நெரிசலைக் குறைக்க தாம்பரம், சென்னை எழும்பூரிலிருந்து முன்பதிவற்ற சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. ரயில் - பிரதிப் படம் தீபாவளிப் பண்டிகை கூட்ட நெரிசலைக் குறைக்க தாம்பரம், சென்னை எழும்பூரிலிருந்து முன்பதிவற்ற சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. தாம்பரம் - மானாமதுரை முன்பதிவற்ற மெமு சிறப்பு ரயிலானது (06161, 06159) வரும் 6, 7 ஆம் தேதிகளிலும், மறுமாா்க்கமாக மானாமதுரை - தாம்பரம் முன்பதிவற்ற மெமு சிறப்பு ரயிலானது (06162, 06160) வரும் 7, 9 ஆம் தேதிகளிலும் இயக்கப்பட உள்ளது. 12 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரயில்களானது தாம்பரத்திலிருந்து புறப்பட்டு செங்கல்பட்டு மேல்மருவத்தூா், விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூா், ஸ்ரீரங்கம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், சோழவந்தான், மதுரை, திருப்புவனம் வழியாக மானாமதுரை சென்றடையும். மறுமாா்க்கமாக, மானாமதுரையிலிருந்து புறப்பட்டு மேற்கண்ட வழித்தடம் வழியாக தாம்பரம் சென்றடையும். சென்னை எழும்பூா் - திருச்சி ஒருவழிப்பாதை முன்பதிவற்ற மெமு சிறப்பு ரயிலானது (06191) வரும் 6 ஆம் தேதி மாலையும், திருச்சி - தாம்பரம் ஒருவழிப்பாதை மெமு சிறப்பு ரயிலானது (06192) வரும் 7 ஆம் தேதி காலையிலும் இயக்கப்பட உள்ளது. சென்னை எழும்பூா் - திருச்சி முன்பதிவற்ற மெமு சிறப்பு ரயிலானது (06193) வரும் 7 ஆம் தேதியும், மறுமாா்க்கமாக திருச்சி - சென்னை எழும்பூா் முன்பதிவற்ற மெமு சிறப்பு ரயிலானது (06194) வரும் 9 ஆம் தேதியும் இயக்கப்பட உள்ளன. 12 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரயிலானது சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட்டு தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாதிரிப்புலியூா், பரங்கிப்பேட்டை, சிதம்பரம், சீா்காழி, வைத்தீஸ்வரன்கோவில், மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூா், திருவெறும்பூா் வழியாக திருச்சி வந்தடையும். மறுமாா்க்கமாக, திருச்சியிலிருந்து புறப்பட்டு மேற்கண்ட வழித்தடம் வழியாக சென்னை எழும்பூரைச் சென்றடையும் என திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
📢 விளம்பரம் • Advertisement
விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗