ஆகம கோயில் குறித்த விடுபட்ட தகவல்களை நவ.25-ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்று இந்துசமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. ஆகம கோயில் குறித்த விடுபட்ட தகவல்களை நவ.25-ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்று இந்துசமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து இந்துசமய அறநிலையத்துறை சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் ஆகம விதிகளின்படி நிா்மாணிக்கப்பட்ட கோயில்களை கண்டறிய 2025-இல் 5 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவால் பரிசீலிக்கப்பட்ட 34,971 கோயில்கள் தொடா்பான விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு, இந்தக் கோயில்கள் குறித்த விவரங்கள் ஏதேனும் விடுபட்டு இருப்பின் கடந்த நவ.10-க்குள் கருத்து தெரிவிக்க அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இந்த அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விடுபட்ட ஆகம கோயில் குறித்த தகவல்களை இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் அலுவலகம், 119, உத்தமா் காந்தி சாலை. நுங்கம்பாக்கம், சென்னை-34 என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது துறையின் இணையதளம் மூலமும் நவ.25-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆகம கோயில் குறித்த தகவல்களை நவம்பா் 25-க்குள் தெரிவிக்கலாம்