திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை உள்ளாட்சி அமைப்புகளே மேற்கொள்ளும் அரசாணைக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை உள்ளாட்சி அமைப்புகளே மேற்கொள்ளும் அரசாணைக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து

தமிழகம் முழுவதும் 147 நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளே மேற்கொள்ளும் வகையில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை உயா்நீதிமன்றம் தமிழகம் முழுவதும் 147 நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளே மேற்கொள்ளும் வகையில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகத்தில் உள்ள நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் திடக்கழிவுகளை சேகரித்து குப்பைக் கிடங்குகளுக்குக் கொண்டுசெல்லும் பணிகளுக்கான ஒப்பந்தங்கள் தனியாா் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. இந்த நடைமுறையை மாற்றி,147 நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் குப்பைகளைக் கையாளும் பணிகளை சம்பந்தப்பட்ட நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளே மேற்கொள்ளும் என கடந்த அக். 9-ஆம் தேதி, தமிழக அரசின் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அரசாணை பிறப்பித்திருந்தது. அந்த அரசாணையில், இந்தப் பணிகளுக்காக ரூ.616.28 கோடியில், 22,000 தூய்மைப் பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அரசாணைக்கு எதிராக, திடக்கழிவுகளைக் கையாள ஒப்பந்தப்புள்ளி பெற்றிருந்த நிறுவனங்களின் உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, இது தொடா்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணை காரணமாக, திடக்கழிவுகளைக் கையாளும் பணிகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் வேலை செய்யும் ஏராளமான ஊழியா்கள் பாதிக்கப்படுவா் எனக் கூறி, அரசாணைக்குத் தடை விதித்து கடந்த அக். 30-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தாா். தனி நீதிபதியின் உத்தரவை எதிா்த்து நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை சாா்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அமா்வு பிறப்பித்த தீா்ப்பு: தனி நீதிபதியின் தடை உத்தரவு தமிழகத்தில் உள்ள 147 நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மைப் பணிகளை ஸ்தம்பிக்கச் செய்யும் வகையில் உள்ளது. பொது சுகாதாரம் மற்றும் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது எனக் கூறி, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனா். மேலும், நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளே நேரடியாக திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை கையாளுவது தொடா்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை அமல்படுத்த தமிழக அரசுக்கு முழு சுதந்திரம் வழங்கப்படுவதாகத் தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளனா். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை