கோவாவில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த காவல் ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை - சித்திரிப்பு கோவாவில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த காவல் ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வடக்கு கோவாவில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் காவல் ஆய்வாளர் ஒருவர், ஒரு பெண்ணின் உதவியுடன் 16 வயது சிறுமியைப் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முதலில், குழந்தைகள் உதவி மையத்திற்குத் தொடர்பு கொண்டு அச்சிறுமி புகாரளித்த நிலையில் அது காவல் ஆய்வாளருக்கு அனுப்பப்பட்டது. பின்னர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரிபாந்தர் பகுதியில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஜூலை 25 மற்றும் அக்டோபர் 27 ஆகிய தேதிகளில் அச்சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக, காவல் ஆய்வாளர் விகாஸ் தேக்கர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த பெண் ரஞ்சினி பாலியேகர் ஆகியோர் மீது போக்ஸோ வழக்குப் பதியப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட அதிகாரி மற்றும் அவருக்கு உதவியாக இருந்த பெண் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதுபோன்ற குற்றங்கள் மீது அதிகாரிகள் என்ற பாரபட்சம் பார்க்காமல் சகிப்புத் தன்மையின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டிஜிபி அலோக் குமார் தெரிவித்தார். குற்றப்பிரிவு அலுவலகத்திற்குள் வைத்து சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த வழக்கு தொடர்பாக ஓல்ட் கோவா காவல் நிலைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
குற்றப்பிரிவு அலுவலகத்தில் 16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: காவல் ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗