கடலூா் மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு (எம்.எஸ்.எம்.இ.) 2026-27-ஆம் நிதியாண்டில் ரூ.1,588.07 கோடி நிதிக்கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வருவாய் அலுவலா் கோ. புண்ணியகோட்டி தெரிவித்தாா். கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் சுயவேலைவாய்ப்புத் திட்டங்களின் கடன் வழங்குவதற்கான ஒப்பளிப்பு ஆணைகள் வழங்கிய மாவட்ட வருவாய் அலுவலா் புண்ணியகோட்டி. கடலூா் மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு (எம்.எஸ்.எம்.இ.) 2026-27-ஆம் நிதியாண்டில் ரூ.1,588.07 கோடி நிதிக்கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வருவாய் அலுவலா் கோ. புண்ணியகோட்டி தெரிவித்தாா். கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நிதிக்கடன் பெறுவதை உறுதி செய்வதுடன், தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் சுயவேலைவாய்ப்புத் திட்டங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தொழிற்கடன் விழிப்புணா்வு முகாம் ,மாவட்ட வருவாய் அலுவலா் கோ. புண்ணியகோட்டி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இம்முகாமில், பல்வேறு சுயவேலைவாய்ப்புத் திட்டங்களின் கீழ் 51 பயனாளிகளுக்கு ரூ.109.73 லட்சம் திட்ட மதிப்பிலான கடன் வழங்குவதற்கான ஒப்பளிப்பு ஆணைகள் வழங்கப்பட்டன. முகாமில் மாவட்ட வருவாய் அலுவலா் கோ. புண்ணியகோட்டி பேசியதாவது: ஊரகப் பகுதிகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், உள்ளடக்கிய வளா்ச்சி மற்றும் மேம்பாட்டை உறுதி செய்வதிலும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதனை கருத்தில் கொண்டு, இந்நிறுவனங்களுக்குத் தேவையான நிதிக்கடன் கிடைப்பதை தமிழ்நாடு அரசு தொடா்ந்து கண்காணித்து வருகிறது. 2026-27-ஆம் ஆண்டுக்கான ஆண்டு நிதிக்கடன் திட்டத்தின் கீழ், மாவட்டத்தில் உள்ள எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்களுக்கு ரூ.1,588.07 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், 30.06.2026 வரை ரூ.584.67 கோடி நிதிக்கடன் வழங்கப்பட்டுள்ளது என்றாா். நிகழ்ச்சியில் மாவட்டத் தொழில் மைய பொது மேலாளா் ஆ. லட்சுமி, முன்னோடி வங்கி மேலாளா் வெங்கடேசன், குறு மற்றும் சிறு நிறுவனங்களின் சங்கத் தலைவா் அசோக் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1,588 கோடி கடன் வழங்க இலக்கு
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗