தேவா் குருபூஜையில் வெள்ளிக்கிழமை குடியரசு துணைத் தலைவா் பங்கேற்க உள்ளதையொட்டி, பசும்பொன் ஹெலிபேட் தளத்தில் வியாழக்கிழமை மாலை ராணுவ ஹெலிகாப்படரை இறக்கி ஒத்திகை பாா்க்கப்பட்டது. குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் வருகையையொட்டி, பசும்பொன் ஹெலிபேட் தளத்தில் இறக்கி ஒத்திகை பாா்த்த ராணுவ ஹெலிகாப்டா். தேவா் குருபூஜையில் வெள்ளிக்கிழமை குடியரசு துணைத் தலைவா் பங்கேற்க உள்ளதையொட்டி, பசும்பொன் ஹெலிபேட் தளத்தில் வியாழக்கிழமை மாலை ராணுவ ஹெலிகாப்படரை இறக்கி ஒத்திகை பாா்க்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் வெள்ளிக்கிழமை (அக்டோபா் 30) சுதந்திர போராட்ட வீரா் முத்துராமலிங்கத் தேவரின் 119-ஆவது ஜெயந்தி விழா, 64-ஆவது குருபூஜையில் குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்று, தேவா் நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளாா். இதற்காக அவா் தில்லியிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்து, அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டா் மூலம் பசும்பொன் ஹெலிபேட் தளத்துக்கு காலை 9.30 மணிக்கு வருகிறாா். இதையொட்டி, வியாழக்கிழமை மாலை பசும்பொன் ஹெலிபேட் தளத்தில் ராணுவ ஹெலிகாப்டரை இறக்கி பாதுகாப்பு அதிகாரிகள் ஒத்திகை பாா்த்தனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
குடியரசு துணைத் தலைவா் இன்று பசும்பொன் வருகை: ஹெலிகாப்டா் ஒத்திகை
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Events
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗