குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? என சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது குறித்து... குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது துவங்கப்படும் என சிபிஐ தரப்புக்கு, சென்னை எம்.பி.- எம்.எல்.ஏ.க்கள் மீதான சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை (நவ. 4) கேள்வி எழுப்பியுள்ளது. மத்திய, மாநில அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்க அனுமதித்ததாக, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டி.ஜி.பி., டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர் எஸ்.ஜார்ஜ் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகள் என, மொத்தம் 25 பேருக்கு எதிராக, சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி என்.லோகேஸ்வரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் குற்றச்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்கள் சி விஜயபாஸ்கர், ரமணா மற்றும் முன்னாள் சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ் உட்பட 24 பேர் ஆஜராகினர். முன்னாள் டிஜிபி டி.கே. ராஜேந்திரன் ஆஜராகவில்லை. அவர் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கை மூன்று மாதத்தில் எவ்வாறு முடிக்கப்படும் என உயர் நீதிமன்றம் கேட்டுள்ளது. அதனால் சாட்சி விசாரணை எப்போது தொடங்கப்படும். எப்போது ஆவணங்கள் தாக்கல் செய்யப்படும் என சிபிஐ தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார். பின்னர், வழக்கின் விசாரணையை வரும் 11ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி, விசாரணைக்கு குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பிலிருந்து முழுமையாக ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்வி