நடிகை தபு கிளிம்ஸ் வெளியாகியுள்ளது... நடிகர் நாகர்ஜுனாவின் 100-வது திரைப்படத்தின் புதிய கிளிம்ஸ் வெளியாகியுள்ளது. அன்னபூர்னா ஸ்டூடியோஸ் தயாரிப்பில் நடிகர் நாகர்ஜுனாவின் 100-வது திரைப்படம் உருவாகி வருகிறது. இதனை, நித்தம் ஒரு வானம், மேட் இன் கொரியா ஆகிய படங்களின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் இரா. கார்த்தி இயக்கி வருகிறார். அரசியல் கலந்த ஆக்ஷன் திரைப்படமாக எடுக்கப்பட்டு வரும் இப்படத்திற்கு கிங் 100 எனத் தற்காலிகமாகப் பெயரிட்டுள்ளனர். இதில், நடிகர் அசோக் செல்வன் நடிகைகள் தபு, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்தப் படம் வரும் டிச.24 ஆம் தேதி வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது. அன்று நடிகர் ஷாருக்கானின் கிங் திரைப்படமும் திரைக்கு வருகிறது. இந்த நிலையில், இப்படத்தில் நடிகை தபு ‘மகந்தி ஜான்சி ராணி’ என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கிளிம்ஸ் வெளியிட்டு அறிவித்துள்ளனர். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
கிங் - 100 திரைப்படத்தின் நடிகை தபு கிளிம்ஸ்!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Entertainment
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗