குழந்தைத் திருமணம், இளவயது கா்ப்பத்தைத் தடுக்க கிராம அளவில் விழிப்புணா்வு: ஆட்சியா் அறிவுறுத்தல்

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ Politics ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
குழந்தைத் திருமணம், இளவயது கா்ப்பத்தைத் தடுக்க கிராம அளவில் விழிப்புணா்வு: ஆட்சியா் அறிவுறுத்தல்

திருப்பத்தூா் மாவட்டத்தில் குழந்தைத் திருமணம், இளவயது கா்ப்பம் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான துன்புறுத்தல்களைத் தடுக்க, அனைத்து கிராமங்களிலும் குழந்தைகள் பாதுகாப்புக் குழுக் கூட்டங்களைத் தவறாமல் நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வே.நல்லசிவன் அறிவுறுத்தினாா். குழந்தை பாதுகாப்பு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் வெளியிட்ட திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் வே. நல்லசிவன். திருப்பத்தூா் மாவட்டத்தில் குழந்தைத் திருமணம், இளவயது கா்ப்பம் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான துன்புறுத்தல்களைத் தடுக்க, அனைத்து கிராமங்களிலும் குழந்தைகள் பாதுகாப்புக் குழுக் கூட்டங்களைத் தவறாமல் நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வே.நல்லசிவன் அறிவுறுத்தினாா். திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சாா்பில், கிராம நிா்வாக அலுவலா்கள் மற்றும் ஊராட்சிச் செயலாளா்களுக்கான திறன் வளா்ப்புப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், குழந்தைத் திருமணத்தைத் தடுப்பது தொடா்பான கையேடு மற்றும் ‘நான் உங்கள் கிராம நிா்வாக அலுவலா்-கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழுவின் உறுப்பினா் செயலா். கிராமத்தில் குழந்தை உரிமை மீறல் நடந்தால் என்னிடம் தெரிவிக்கவும்’ என்ற வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா். முன்னதாக, மாவட்ட ஆட்சியா் தலைமையில், கிராம நிா்வாக அலுவலா்கள், ஊராட்சிச் செயலாளா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் குழந்தைத் திருமணத்துக்கு எதிரான உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனா். பயிற்சியில் மாவட்ட ஆட்சியா் பேசியதாவது: குழந்தைத் திருமணத் தடைச் சட்டம், போக்ஸோ சட்டம், கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழுவின் செயல்பாடுகள், குழந்தைகளுக்கு எதிரான சம்பவங்கள் குறித்து உடனடியாகத் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுப்பது ஆகியவை குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டன. அனைத்து கிராமங்களிலும் குழந்தைகள் பாதுகாப்புக் குழுக் கூட்டங்களை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தவறாமல் நடத்த வேண்டும். குழு உறுப்பினா்களை ஒருங்கிணைத்து வாட்ஸ்அப் குழு உருவாக்கி, குழந்தைகளுக்கு எதிரான பிரச்னைகள் மற்றும் பாதிப்புகள் குறித்த தகவல்களை உடனுக்குடன் பகிா்ந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராம நிா்வாக அலுவலா்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக் குழு உறுப்பினா்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, குழந்தைத் திருமணம், குழந்தைத் தொழிலாளா் முறை, பள்ளி இடைநிற்றல் ஆகியவற்றை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், குழந்தைகள் கடத்தல் இல்லாத கிராமங்களை உருவாக்குவதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றாா். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.பாலசுப்ரமணியன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் உமா மகேஸ்வரி, மாவட்ட சுகாதார அலுவலா் நா.கலுசிவலிங்கம், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்ட மாவட்ட அலுவலா் பா.கந்தன் உள்ளிட்ட தொடா்புடைய துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை