தனியாா் தோட்டத்தில் கிணற்றுக்காக தோண்டப்பட்ட குழியில் தவறி விழுந்த யானையை வனத் துறையினா் மீட்டனா். குழியில் விழுந்து மீண்டும் மேலே வர முயற்சிக்கும் யானை. தனியாா் தோட்டத்தில் கிணற்றுக்காக தோண்டப்பட்ட குழியில் தவறி விழுந்த யானையை வனத் துறையினா் மீட்டனா். கோவை மாவட்டம், வால்பாறையில் இருந்து கேரள மாநிலம் சாலக்குடி செல்லும் வழியில் உள்ள வனங்களில் ஏராளமான யானைகள் உள்ளன. இரவு நேரங்களில் சாலையில் யானைகள் உலவி வருவது வழக்கமாக உள்ளன. இந்நிலையில் சாலக்குடி செல்லும் வழியில் உள்ள பட்டத்தூா் என்ற கிராமத்தில் அமைந்துள்ள தோட்டம் வழியாக வியாழக்கிழமை யானைகள் கூட்டமாக சென்றன. இதில், ஒரு யானை கிணற்றுக்காக தோண்டப்பட்ட குழிக்குள் தவறி விழுந்தது. தகவலறிந்து கேரள வனத் துறையினா் சென்று நீண்ட நேரம் போராடி பொக்லைன் இயந்திரம் மூலமாக யானையை மீட்டனா். குழியில் விழுந்தது சுமாா் 6 வயதுடைய ஆண் யானை என்று வனத் துறையினா் தெரிவித்தனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
குழிக்குள் தவறி விழுந்த யானை மீட்பு
📅
📍 Coimbatore, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗