லாஸ் ஏஞ்சலிஸ் மேயர் தேர்தலில் கேரன் பாஸை வீழ்த்தி இந்திய குடியேறி நித்யா ராமன் வெற்றி

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: bbc.com (original report) ↗
லாஸ் ஏஞ்சலிஸ் மேயர் தேர்தலில் கேரன் பாஸை வீழ்த்தி இந்திய குடியேறி நித்யா ராமன் வெற்றி

பட மூலாதாரம், Getty Images லாஸ் ஏஞ்சலிஸ் மேயர் தேர்தலில், ஜனநாயக சோசலிசவாதியான நித்யா ராமன், பதவி வகித்து வந்த கேரன் பாஸை தோற்கடித்துள்ளார். முன்னதாக அமெரிக்க காங்கிரஸில் பணியாற்றியதோடு, அரசியல் பதவிக்காகப் போட்டியிட்ட எந்தத் தேர்தலிலும் தோல்வி அடைந்ததில்லாத அரசியல் செல்வாக்கு மிக்க தலைவரான பாஸுக்கு எதிராக, வெற்றி வாய்ப்பு குறைந்த வேட்பாளராகக் களமிறங்கிய நித்யா ராமன் வெற்றி பெற்றது கலிஃபோர்னியாவின் அரசியல் பார்வையாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. நித்யா ராமன், நியூயார்க் நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானியுடன் அடிக்கடி ஒப்பிடப்பட்டு வருகிறார். இருவரும் ஜனநாயக சோசலிசவாதிகளாக இருப்பதுடன், முற்போக்குக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்தனர். அவரது வெற்றி, அமெரிக்காவின் மிகப் பெரிய இரண்டு நகரங்களும் இனி ஜனநாயக சோசலிசவாதிகளால் வழிநடத்தப்பட உள்ளன என்பதை உறுதிப்படுத்துகிறது. அந்த அணியில், மம்தானி, அலெக்சாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ் போன்ற அமெரிக்காவின் மிகவும் பிரபலமான அரசியல்வாதிகளும் அடங்குகின்றனர். லாஸ் ஏஞ்சலிஸில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் மேயராகத் தேர்ந்தெடுக்கப்படுவது பெரும்பாலும் எதிர்பார்க்கப்பட்டதே. ஆனால் அமெரிக்காவின் மக்கள்தொகை அதிகமான நகரங்களில் இரண்டாவது இடத்திலுள்ள அந்த நகரில், வாக்காளர்கள் எவ்வளவு இடதுசாரி நோக்கில் செல்லத் தயாராக உள்ளனர் என்பதே முக்கியக் கேள்வியாக இருந்தது. பட மூலாதாரம், Getty Images ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பாஸ், வியாழக்கிழமை சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், நித்யா ராமனை தொடர்புகொண்டு தனது தோல்வியை ஒப்புக்கொண்டதாக அறிவித்தார். "நாங்கள் எதிர்பார்த்த முடிவு இதுவல்ல என்றாலும், லாஸ் ஏஞ்சலிஸ் மக்கள் தங்களது முடிவைத் தெரிவித்துள்ளனர்" என்று அவர் எழுதினார். "இந்த நகரை முன்னேற்றும் பணியே லாஸ் ஏஞ்சல்ஸுக்கு நம்மில் ஒவ்வொருவரிடம் இருந்தும் தேவைப்படுகிறது. எனக்கு லாஸ் ஏஞ்சலிஸ் மிகவும் பிடிக்கும். லாஸ் ஏஞ்சலிஸின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. மேலும், சிறந்த வாழ்க்கைக்கான வாக்குறுதி நம் அனைவருக்குமானதாக இருப்பதை உறுதி செய்ய நான் தொடர்ந்து செயல்படுவேன்" என்று பாஸ் கூறினார். நகர சபை உறுப்பினரும் இந்திய குடியேறியான நித்யா ராமன், மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்ற முழக்கத்துடன், "சீரழிந்த தற்போதைய நிலைமையையும், மக்களை மீண்டும் மீண்டும் ஏமாற்றிய அரசியல்வாதிகளையும் சரி செய்வோம்" என்ற வாக்குறுதியை முன்வைத்து தேர்தலில் போட்டியிட்டார். End of அதிகம் படிக்கப்பட்டது பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு வீடற்றோரின் எண்ணிக்கையைக் குறைப்பது, நகரில் வீட்டு வசதிகளை அதிகரிப்பது, தொடர்ந்து குறைக்கப்பட்டு வரும் ஹாலிவுட் வேலைவாய்ப்புகளைப் பாதுகாப்பது மற்றும் குடியேற்ற அமலாக்க நடவடிக்கைகளில் இருந்து மக்களைக் காப்பது ஆகியவற்றை அவர் தனது தேர்தல் வாக்குறுதிகளாக முன்வைத்தார். மேலும், நகர அழகுபடுத்தும் முயற்சிகளுக்கு உதவுவது, சாலைகளைச் சீரமைப்பது, நகரின் இரவுநேர சமூக மற்றும் பொழுதுபோக்கு வாழ்க்கையை மீண்டும் உயிர்ப்பிப்பது உள்ளிட்ட பல்வேறு நகர்ப்புற பிரச்னைகளுக்கும் தீர்வு காண உறுதியளித்தார். ஆனால் தேர்தல் போட்டியில் முக்கிய விவகாரமாக இருந்தது லாஸ் ஏஞ்சலிஸ் தீ விபத்துகள்தான். 2025ஆம் ஆண்டு ஏற்பட்ட அந்தத் தீ விபத்துகள் டஜன் கணக்கான உயிர்களைக் காவுகொண்டதுடன், பல குடியிருப்புப் பகுதிகளையும் அழித்தன. அவசர நிலையின்போது பாஸ் நகரில் இல்லாதது மற்றும் பேரழிவுக்கு நகர நிர்வாகம் எடுத்த மெத்தனமான நடவடிக்கை ஆகியவற்றால் அவர் கடுமையான அரசியல் எதிர்ப்பைச் சந்தித்தார். லாஸ் ஏஞ்சலிஸின் அடுத்த மேயர், 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சூப்பர் போல் போட்டியையும், 2028 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளையும் நடத்தும் பொறுப்பைக் கொண்டிருப்பார். பட மூலாதாரம், Getty Images நித்யா ராமன், ஆரம்பத்தில் வெற்றி வாய்ப்பு குறைவாகக் கருதப்பட்ட வேட்பாளராகத் தேர்தல் களத்தில் இறங்கினார். ஆனால், குறிப்பாக இளம் வாக்காளர்களிடையே ஆதரவைப் படிப்படியாக அதிகரித்த அவர், இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற முதன்மைத் தேர்தலில் ரியாலிட்டி தொலைக்காட்சி நட்சத்திரமான ஸ்பென்சர் பிராட்டை தோற்கடித்தார். பாஸுக்கு எதிரான அவரது வெற்றி, அமெரிக்கா முழுவதும் காணப்படும் வாக்காளர் மனநிலையின் பிரதிபலிப்பாகக் கருதப்படுகிறது. கடந்த பல தசாப்தங்களாக தாராளவாத தலைவர்களைத் தேர்ந்தெடுக்காத குடியரசுக் கட்சியின் வலுவான ஆதரவுப் பகுதிகளைக்கூட உள்ளடக்கிய வகையில், ஜனநாயகக் கட்சி பல்வேறு பகுதிகளில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றுள்ளது. அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் டி.சி.யும் ஜனநாயக சோசலிசவாதியான ஜெனீஸ் லூயிஸ் ஜார்ஜை தனது புதிய மேயராக தேர்ந்தெடுத்துள்ளது. இதன் மூலம், அமெரிக்காவின் மற்றொரு முக்கிய நகரிலும் முற்போக்கு அரசியல் தலைமையின் செல்வாக்கு மேலும் வலுப்பெற்றுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம், வெள்ளை மாளிகையில் ஜனநாயகக் கட்சியின் இடதுசாரி பிரிவைச் சேர்ந்த அரசியல்வாதிகளின் வெற்றிகள் குறித்துக் கேட்கப்பட்டபோது, "வரலாற்றைப் பார்த்தால், அது ஒரு பேரழிவாகவே முடியும்" என்று அவர் கூறினார். இதுபோன்ற வேட்பாளர்கள், குடியரசுக் கட்சியினரின் தாக்குதல்களின் முக்கிய இலக்காக மாறியுள்ளனர். பாஸ், லாஸ் ஏஞ்சலிஸின் முதல் கருப்பினப் பெண் மேயராக பதவி ஏற்பதற்கு முன்பு, அமெரிக்க நாடாளுமன்றத்தின் முக்கிய உறுப்பினராக இருந்தார். அவரது அரசியல் மற்றும் சமூக வேர்கள் லாஸ் ஏஞ்சலிஸ் நகரத்துடனும் அதன் வரலாற்றுடனும் நெருக்கமாகப் பின்னிப் பிணைந்தவை. காவல்துறையினரின் வன்முறையால் தாக்கப்பட்ட கருப்பினத்தைச் சேர்ந்த ராட்னி கிங் சம்பவத்தைத் தொடர்ந்து 1992ஆம் ஆண்டு வெடித்த வன்முறை கலவரங்களின்போதும் அவர் சமூக ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றியுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை