பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகம் வாங்கியதில் மிகப்பெரிய ஊழல்? AI மூலம் தாறுமாறாக எழுதப்பட்ட நூல்கள்

📅 📍 Coimbatore, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: oneindia.com (original report) ↗
பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகம் வாங்கியதில் மிகப்பெரிய ஊழல்? AI மூலம் தாறுமாறாக எழுதப்பட்ட நூல்கள்

கோவை: அண்மையில் முதல்வர் விஜய் திறந்து வைத்த கோவை பெரியார் அறிவுலகத்தில் புத்தகங்கள் கொள்முதலில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பது வெட்டவெளிச்சம் ஆகியுள்ளது. அறிமுகம் இல்லாத பதிப்பகத்தின் பெயரில் ஏஐ உதவியுடன் விநோதமான பெயர்களில் நூல்கள் உருவாக்கப்பட்டு, மிக அதிக விலை குறிப்பிடப்பட்டு, பெரியார் அறிவுலகத்தில் வைக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கோவை காந்திபுரத்தில் அமைந்துள்ள பெரியார் அறிவுலகம் நூலகம் மற்றும் அறிவியல் மையத்தில் நூல் கொள்முதல் தொடர்பான முறைகேடு விவகாரங்கள் குறித்து எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய கட்டுரையைத் தொடர்ந்து, தற்போது அரசியல் களத்திலும், சமூக வலைதளங்களிலும் விவாதங்களும் சர்ச்சைகளும் எழுந்துள்ளன. கோவை பெரியார் அறிவுலகம் தமிழக பொதுப்பணித்துறையால், கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடியில் 'பெரியார் அறிவுலகம்' என்கிற பெயரில், நுாலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டப்பட்டு உள்ளது. இத்திட்டம் தமிழக அரசின் 2024-25 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. காந்திபுரத்தில் சிறைத்துறைக்குச் சொந்தமான, 6.98 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. அதில், 1.98 லட்சம் சதுரடியில் தரைத்தளம் மற்றும் ஏழு தளங்களுடன் கட்டப்பட்டது. புத்தகத்தை பிரித்து வைத்திருப்பதுபோல் வடிவமைத்து கட்டியிருப்பது இதன் வடிவமைப்பின் சிறப்பம்சம். தரைத்தளத்தில் மாற்றுத்திறனாளிகள் பிரிவு, ஆடிட்டோரியம், கோளரங்கம், முதல் தளத்தில் வரவேற்பறை, அறிவியல் கண்காட்சி அறை, இரண்டாம் தளத்தில் சொந்த நுால்கள் பிரிவு, குழந்தைகளுக்கான நுாலகம், மூன்றாம் தளத்தில் நிர்வாக அலுவலகம், போட்டி தேர்வுக்கான நுாலகம், நான்காம் தளத்தில் பருவ இதழ்கள் பிரிவு, தமிழ் நுால்கள் பிரிவு, ஐந்தாம் தளத்தில் ஆங்கில நுால்கள் பிரிவு மற்றும் இன்குபேஷன் சென்டர், ஆறாம் தளத்தில் ஆங்கில நுால்கள் பிரிவு மற்றும் இன்குபேஷன் சென்டர், ஏழாம் தளத்தில் அறிவியல் மையம், டிஜிட்டல் நுாலகம் ஆகியவை உள்ளன. முதல்வர் ஜோசப் விஜய் அக்டோபர் 16 ஆம் தேதி இந்த பிரமாண்ட பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்தார். முந்தைய திமுக ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்திற்கு, முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார். கோவையில் பெரியார் அறிவுலகம் அமைத்ததற்காகத் திராவிடர் கழகம் சார்பில் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது. திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டு, கட்டுமானப் பணிகள் நடைபெற்று, தவெக ஆட்சியில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டிருக்கும் இந்த பிரமாண்ட நூலகத்தின் திறப்பு விழா நிகழ்வில், முந்தைய ஆட்சியாளர்களைப் பற்றி முதல்வர் விஜய் குறிப்பிடாதது விமர்சனங்களை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், பெரியார் அறிவுலக நூல்கள் கொள்முதலில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எழுத்தாளர் பெருமாள் முருகன், செய்தி தளம் ஒன்றில், இதுதொடர்பாக எழுதியுள்ள கட்டுரை விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. பெரியார் அறிவுலகத்தில் தமிழ் நூல்கள் பிரிவில் அகல் விளக்கு என்ற பதிப்பகம் பதிப்பித்த சுமார் 1,800க்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளதாகவும் அந்த நூல்களின் விலை மிக அதிகமாக உள்ளதாகவும் எழுத்தாளர் பெருமாள் முருகன் குறிப்பிட்டுள்ளார். நூல்களின் பக்க எண்ணிக்கைக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படுவது வழக்கம். 300 பக்க தமிழ் நூல்கள், 400 ரூபாய்க்குள் விலை இருப்பது வழக்கம். ஆனால், அகல் விளக்கு பதிப்பகத்தின் நூல்கள், 1300, 1400 என தாறுமாறாக விலை வைக்கப்பட்டுள்ளன. விலை மட்டும்தான் இப்படி தாறுமாறா என்றால், அதுதான் இல்லை. புத்தகமே தாறுமாறாக ஏஐ மூலம் எழுதப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் எழுத்தாளர் பெருமாள் முருகன். நாலடியார் - வாழ்வின் வழிகாட்டி என்ற நூலை சூர்யா பாலு என்பவர் எழுதியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நூலின் பின்னட்டைக் குறிப்பில், 'நாலடியார், தமிழின் முக்கியமான கவி மற்றும் தத்துவ ஞானி. அத்துடன் உலகம் முழுவதும் அறியப்பட்ட தமிழ் இலக்கியத்தின் தொலைநோக்கிய அணுகுமுறை போன்றவராக வாழ்ந்தவர். அவர் தனது பாடல்களிலும் கவிதைகளிலும் மனித வாழ்க்கையின் உண்மைகளை மிக எளிமையாகவும் ஆழமாகவும் விளக்கியுள்ளார்.' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நாலடியார் நூல், பெயர் தெரியாத சமண முனிவர்கள் எழுதிய நானூறு வெண்பாக்களின் தொகுப்பு என்றுதான் அறிந்திருக்கிறோம். ஆனால், நாலடியார் என்பவர் ஒரு கவிஞர், தத்துவஞானி என்ற குறிப்போடு உள்ள இந்தப் புத்தகம் பெரியார் அறிவுலகத்தில் வைக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபோல, ஜோதி சரவணன், ஜோதி ஹரிஹரன், ஜோதிலட்சுமி அன்பழகன், நிவேதா அன்பழகன், தாமரை பன்னீர், ராணி பன்னீர், தாமரை கார்த்தி, தாமரை சிவா, தாமரை முரளி, சூர்யா பாலு, மங்களேஸ்வரி பாலு, விஜய பாலு, விஜய ஆதித்தன், திரிஷா விஜய், மோனிகா சூர்யா, மோனிகா ரவி, பிருந்தா சேதுராமன், தர்ஷினி சேதுராமன், மனிஷா சரவணன், மனிஷா தினேஷ், திவ்யா தினேஷ் உள்பட ஏராளமான போலி புனை பெயர்களில் எழுதப்பட்ட ஏராளமான ஏஐ புத்தகங்கள், அகல் விளக்கு பதிப்பகத்தின் பெயரில் பெரியார் அறிவுலகத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. திரிஷா விஜய் என்பவர் எழுதியதாக 'அதிகாரத்தின் நிழலில் - இந்தியாவில் துன்புறுத்தலின் அரசியல்' என்ற நூலும் இடம்பெற்றுள்ளது. அகல் விளக்கு பதிப்பகம் போலவே பீனிக்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ள நூல்களும் இப்படியானவையே எனப் பெருமாள் முருகன் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள ISBN எண்ணும் போலியானது என்று தெரியவந்துள்ளது. அகல் விளக்கு பதிப்பகத்தின் முகவரி எனக் குறிப்பிடப்பட்டிருப்பதே ஒரு போலி முகவரி என்றும் தெரிகிறது. பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட நூலகங்களில் வைப்பதற்காகவே, ஒரு பதிப்பகத்தை உருவாக்கி, போலியான பெயர்களில், தரமற்ற, உண்மைக்கு மாறான தகவல்களைக் கொண்ட புத்தகங்களை உருவாக்கி இருப்பதாகத் தெரிகிறது. போலி நூல்களை உருவாக்கியவர் யார்? யார் மூலம் அவை அரசு நூலகங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன? இந்த மிகப்பெரிய ஊழலின் பின்னணியில் இருப்பது யார்? மொத்த அறிவுலகத்தையும் சர்வநாசம் செய்யும் இந்தக் கேடுகெட்ட முயற்சியில் ஈடுபட்டது யார்? என்றெல்லாம் உரிய விசாரணை நடத்தி வெளிக்கொண்டுவர வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை