இயக்குநர் லெனின் பாரதி நடிகர் கமல்ஹாசனின் பதிவை விமர்சித்தது குறித்து... கமல்ஹாசன், லெனின் பாரதி - படங்கள்: எக்ஸ் / கமல்ஹாசன், லெனின் பாரதி இயக்குநர் லெனின் பாரதி நடிகர் கமல்ஹாசனின் அடுத்த படத்துக்கான பதிவை விமர்சித்து பதிவிட்டுள்ளார். இது சமூக வலைதளத்தில் பேசுபொருளாகியுள்ளது. விஜய் சேதுபதி தயாரிப்பில் மேற்கு தொடர்ச்சி மலை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவனம் பெற்றவர் இயக்குநர் லெனின் பாரதி. இந்தப் படம் நியூயார்க் திரைப்பட விழாவில் பங்கேற்று வரவேற்பு பெற்றது. நடிகர் கமல்ஹாசன் தனது அடுத்த படத்தின் அறிவிப்பில், “பலிவாங்கல் ரத்தத்தால் மட்டுமே சரி செய்யப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படத்தை எஸ்.யு. அருண்குமார் இயக்கிவருகிறார். இந்த நிலையில் இதனை விமர்சித்து இயக்குநர் லெனின் பாரதி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: கதாநாயக மயக்க சினிமாவால் ஏற்கனவே இளைஞர்கள் மனதில் வன்முறையின் ரத்த வாசனை வீசிக் கொண்டிருக்கிறது. இதில் கமல்ஹாசன் கொஞ்சமும் சமூக சிந்தனையில்லாமல் ’பலிவாங்கல் ரத்தத்தால் மட்டுமே சரி செய்யப்படும்’ என தனது அடுத்த திரைப்பட விளம்பரத்தை முன்னிறுத்துவது கண்டனத்திற்குரியது எனக் கூறியுள்ளார். REVENGE can only be settled in BLOODTomorrow @ 5:00 PM@ikamalhaasan#SUArunkumar #KamalHaasan #Mahendran@RKFI @turmericmediaTM @magizhmandram pic.twitter.com/SkU4VBLo5v தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இளைஞர்கள் மனதில் வன்முறையின் ரத்த வாசனை... கமலை விமர்சித்த இயக்குநர் லெனின் பாரதி!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Entertainment
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗