பெங்களூரில், தன்னுடைய மனைவி, அவரது குடும்பத்தினர் 6 பேரைக் கொன்ற நபர் பற்றி... பெங்களூரில், ஸ்ரீராம்புரா பகுதியில், தன்னுடைய மனைவி மற்றும் மாமனார், மாமியார் உள்பட குடும்பத்தினர் 6 பேரையும் கொன்று குவித்தவரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். நீண்ட நாள்களாக குடும்பத் தகராறு இருந்து வந்த நிலையில், இந்துசேகர் என்பவர் தன்னுடைய மனைவியையும் அவரது ஒட்டுமொத்த குடும்பத்தையும் கொன்ற சம்பவம் வெள்ளிக்கிழமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கொலையானவர்கள் இந்துசேகரின் மனைவி சுனிதா, அவரது தாய் ரூபாவதி, இரண்டு மைத்துனர்கள் சிவக்குமார், ஷங்கர், அவர்களது மனைவிகள் இருவரது பெயரும் திவ்யா, ஷங்கரின் 7 வயது மகன் புனீத் ஆகியோர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுவரை புனீத் உடல் மட்டுமே காவல்துறையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்டவர்களின் உடல்கள் பெங்களூர் மற்றும் இதர பகுதிகளில் வீசப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு, இவர்களுக்குத் திருமணமாகி, குடும்பத் தகராறால் சுனிதா பெற்றோர் வீட்டுக்கு திரும்பி வந்து அங்கேயே இருந்துள்ளார். தம்பதியரை சேர்க்க குடும்பத்தினர் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. சுனிதாவின் பெற்றோரும் சகோதரரும் கொடுக்கும் ஆதரவால்தான், மனைவி தன்னுடன் வந்து வாழ மறுக்கிறார் என்று நினைத்த இந்துசேகர் ஒட்டுமொத்த குடும்பத்தையும் தீர்த்துக் கட்ட நினைத்து, இந்த படுகொலைகளை திட்டமிட்டு நடத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த கொலை அனைத்தும், குற்றவாளியின் வீட்டிலேயே நடந்துள்ளது. முதலில் மனைவியை அம்மிக்கல்லால் அடித்துக் கொலை செய்து உடலை நந்தி மலைப் பகுதியில் தூக்கிச் சென்று வீசியிருக்கிறார். பிறகு, அவரது செல்போனை அணைத்துவிட்டு அவர் சுற்றுலா சென்றுவிட்டதாகக் கூறியிருக்கிறார். பிறகு மைத்துனர்களை விருந்து கொடுப்பதாகக் கூறி அழைத்து வந்து கொலை செய்து உடல்களை பல்வேறு இடங்களில் வீசிவிட்டு, பிறகு அவர்களது மனைவி, தன்னுடைய மாமியார், மைத்துனரின் மகனைக் கொலை செய்திருக்கிறார். அவர்களது உடல்களையும் பல்வேறு இடங்களில் வீசியிருக்கிறார். உடல்களைத் தேடும் பணி நடந்த வருகிறது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
பெங்களூர் பயங்கரம்! மனைவி, அவரது குடும்பத்தினர் 6 பேரைக் கொன்று உடல்கள் வீச்சு!!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗