ஹாட்ரிக் அடித்த சூர்யா: சீன் திரை விமர்சனம் | Scene Movie Review |

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Entertainment ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
ஹாட்ரிக் அடித்த சூர்யா: சீன் திரை விமர்சனம் | Scene Movie Review |

நீண்ட இடைவெளி எல்லாவற்றுக்கும் சேர்த்து வைத்து வட்டியும் முதலுமாக வசூலை அள்ளிக் குவிக்கும் சூர்யா... இந்த தீபாவளி சூர்யா ஃபேன்ஸ் தீபாவளி! இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா, நஸ்ரியா, நஸ்லின் உள்ளிட்டோர் நடித்துள்ள சீன் திரைப்படம் தீபாவளி வெளியீடாக வந்துள்ளது. கருப்பு, விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் படங்களுக்குப் பிறகு இந்த ஆண்டில் மூன்றாவது திரைப்படத்தை கொடுத்திருக்கிறார் நடிகர் சூர்யா. இரு தொடர் வெற்றிகளுக்குப் பிறகு மூன்றாவதாக வந்துள்ள சீன் திரைப்படம் எப்படி இருக்கிறது? குற்றப்பிரிவு காவல் அதிகாரியான இன்பராஜ், சைக்கோ கொலையாளிகளின் கொலைகளைக் கண்டுபிடிக்கிறார். தனக்கு ஏற்பட்ட பாதிப்பு காரணமாக வேலையை விட்டு வெளியேறும் முடிவுக்கு அவர் வர, அவர் முடித்து வைத்த வழக்குகள் மீண்டும் தொடர்கின்றன. புதிதாகக் கொலைகள் நடக்கின்றன. புதிய கொலைகளைச் செய்த அந்த சைக்கோ கில்லர் யார்? இன்பராஜ் எப்படி அவரை தேடிச் செல்கிறார் என்பதே சீன் திரைப்படத்தின் கதை மற்றும் திரைக்கதை. வழக்கம்போல முற்றிலும் மாறுபட்ட நடிப்பைக் கொடுத்திருக்கிறார் சூர்யா. காவல் அதிகாரி, கொலையாளிக்கு இடையிலான கதையில் இயல்பிலேயே கொலையாளி எப்படி பிடிபடப்போகிறார் என்கிற ஒரு சுவாரஸ்யம் இருக்கும். அந்த சுவாரஸ்யத்தை வெறும் திரில்லராகவும் விறுவிறுப்பாகவும் மட்டும் அணுகாமல் ஜித்து மாதவனுக்கு உண்டான பாணியில் நகைச்சுவையாகக் கையாண்ட விதம் படத்தின் பலம். தன்னைத்தானே கிண்டல் செய்வதில் தொடங்கி, தனக்கு ஏற்பட்ட பாதிப்பை மறைத்து ஒரு தைரியமான காவல் அதிகாரியாக சூர்யா வரும் இடங்கள் கவனம் ஈர்க்கின்றன. சூர்யாவின் இளமையான தோற்றமும் துடிப்பான நடிப்பும் படத்திற்கு வண்ணம் கொடுத்திருக்கிறது. வழக்கை முடிப்பதற்காக ஆனந்தராஜ், நஸ்ரியா, சூர்யாவின் அம்மா கதாபாத்திரம் இணையும் காட்சிகள் இரண்டாம் பாதிக்கான ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு நஸ்ரியா தமிழில் தோன்றியிருக்கிறார். அவருக்கே உண்டான வெகுளியான அதேசமயம் திறமையான கதாபாத்திரமாக நஸ்ரியா நடித்திருப்பது சிறப்பாக அமைந்திருக்கிறது. வில்லனாக நடித்துள்ள நஸ்லினின் வித்தியாசமான மேனரிசம் ரசிக்கும்படி அமைந்திருக்கிறது. திட்டம் போட்டு கொலை செய்வதையே தொழிலாக கொண்டிருந்தாலும் அதை ஆர்ப்பாட்டம் இல்லாமல் காட்டி இருப்பதும் மீட்டர் தாண்டாமல் நடித்திருப்பதும் நஸ்லினை நாம் ஏன் ரசிக்கிறோம் என்பதற்கு நியாயம் சேர்க்கிறது. வெறுமென ஊழல் செய்து பின்னணி இசையையும் ஒளிப்பதிவையும் நம்பி வெற்றி பெறும் சில பல மாஸ் படங்களுக்கு நடுவில் ஒப்பீட்டளவில் திரைக்கதைக்கான வேலை நடந்திருக்கிறது சீன் படத்தில். அதேசமயம் ரசிகர்களுக்குத் தேவையான தியேட்டர் தருணங்களையும் சரியாகக் கொண்டுவந்திருக்கிறார்கள். மாயாவை சூர்யா வர்ணிக்கும் காட்சி, கிளைமாக்ஸ் வசனம், இரண்டாம் பாதியில் தியேட்டர் ரசிகர்களுக்காகவே நச்சென இரண்டு சீன்கள் என ஜித்து மாதவன் தீபாவளி சரவெடியைப் பற்ற வைத்திருக்கிறார். கடைசியில் ஹீரோ, வில்லன் அடித்து சண்டையிட்டுக் கொள்வது பழகிப்போனாலும் அதிலும் எப்படி சுவாரஸ்யத்தைக் கூட்டலாம் என மெனக்கெட்டிருக்கிறார்கள். குடும்பத்தோட வாங்க நடுத் தெருவுக்கு போவோம், அரசியலுக்கு போறேன் போன்ற வசனங்கள் நக்கல் ரகம். டிராவிட் செல்வம் ஸ்கோர் செய்திருக்கிறார். சுஷின் ஷ்யாம் பாடல்கள் மற்றும் பின்னணி இசை நன்றாகவே வந்துள்ளன. பாடல்களுக்கு நடனங்களைப் பயன்படுத்தாதது பெரிய நிம்மதி. தமிழ்ச் சூழலில் அனிருத், சாய் அபயங்கர் பாடல்கள் அளவுக்கு படம் வெளியாவதற்கு முன்பே சீன் படத்தின் பாடல்கள் மாஸ் ஹிட் அடித்திருந்தால், தியேட்டரில் ரசிகர்கள் இன்னும் கொஞ்சம் குதூகலமாகியிருப்பார்கள். ஆனால் நிச்சயமாக, இது சுஷின் ஷ்யாமின் குறை கிடையாது. புரிந்தவர்களுக்குப் புரியும். படத்தில் சூர்யாவுக்கு ஒரு பிரச்னை இருக்கிறது. அதனால், அவருடைய உடல்மொழிக்கு ஏற்ப சில ஷாட்கள் நன்றாகவே கட் செய்யப்பட்டு எடிட் செய்யப்பட்டுள்ளன. சூர்யாவைக் காண்பித்த விதத்துக்காகவே அவருடைய ரசிகர்கள் ஒளிப்பதிவாளரைப் பாராட்டுவார்கள். OG சூர்யாவான அழகு சூர்யாவை சீன் படத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள் சீன் படக்குழுவினர். மொத்தத்தில், நீண்ட இடைவெளி எல்லாவற்றுக்கும் சேர்த்து வைத்து வட்டியும் முதலுமாக கருப்பு மற்றும் விஸ்வநாதன் அண்ட் சன்ஸில் வசூலை அள்ளிய சூர்யா, சீன் படத்திலும் அள்ளப்போகிறார். சூர்யாவுக்கு இந்த வருடம் ஹாட்ரிக். இந்தத் தீபாவளி சீன் தீபாவளிதான். Suriya, Nazriya, Naslen starrer Jithu Madhavan's Scene Movie Review தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை