காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த தேசிய திட்டத்தில் அவசர மாற்றங்கள் தேவை.. தலைநகர் தில்லியில் தேசிய தூய்மையான காற்றுத் திட்டத்தை அவசரமாக மறுசீரமைக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தியுள்ளார். முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சரான ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், தலைநகரில் நிலவும் காற்று மாசுபாடு உலகளவில் கவனத்தைப் பெற்றுவரும் நிலையில், ஆற்றல் மற்றும் தூய்மையான காற்று குறித்த ஆய்வு மையம் வெளியிட்டுள்ள விரிவான ஆய்வின்படி, வேறு சில இடங்களில் பொதுச் சுகாதார நெருக்கடி இன்னும் மோசமாக இருப்பதாகக் குறிப்பிட்டார். அக்டோபர் 2026 மாதத்தில், இந்தியாவில் அதிக காற்று மாசுபாடு கொண்ட முதல் மூன்று நகரங்கள் உத்தரப் பிரதேசத்தில் உள்ளன. அவை பாக்பத் மாவட்டத்தில் உள்ள பரௌட், காசியாபாத் மாவட்டத்தில் உள்ள கோரா மற்றும் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள கஜ்ரௌலா ஆகும். உத்தரப் பிரதேசத்தில் 13 நகரங்களிலும், ஹரியாணாவில் 11 நகரங்களிலும், குஜராத்தில் 3 நகரங்களிலும், மத்தியப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானில் தலா 2 நகரங்களும் தேசிய காற்றுத் தரத் தரநிலையை மீறியுள்ளன. இந்தத் தரநிலையே உலக சுகாதார அமைப்பின் பாதுகாப்பு அளவை விட நான்கு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட தேசிய தூய்மையான காற்றுத் திட்டத்தை அவசரமாக மறுசீரமைக்க வேண்டும். இது சாலைகளில் எழும் காற்று மாசுவைக் கட்டுப்படுத்துவதைத் தாண்டிச் செயல்பட வேண்டும். தொழில்துறை, மின் உற்பத்தி மற்றும் குடியிருப்புப் பகுதிகளிலிருந்து வெளியேறும் உமிழ்வைக் கட்டுப்படுத்துதல், நேரடியாக வெளியேற்றப்படும் துகள்களைக் கட்டுப்படுத்துதல், துகள்கள் உருவாவதற்குக் காரணமான வாயுக்களைக் கையாளுதல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். காற்று மண்டல அடிப்படையிலான அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும். தில்லி முழுவதும் உள்ள 59 கண்காணிப்பு நிலையங்களில், காலை 9 மணி நிலவரப்படி 30 நிலையங்கள் காற்றின் தரத்தை 'தீவிரமான' நிலையில் பதிவு செய்தன. மற்ற நிலையங்களில் காற்றின் தரம் 'மிகவும் மோசமான' பிரிவில் இருந்தது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தேசிய தூய்மையான காற்றுத் திட்டத்தை மறுசீரமைக்க காங்கிரஸ் வலியுறுத்தல்!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗