ஆஸி. அணியின் பயிற்சியாளராக மைக் ஹசி நியமனம்..! ஆஷஸ், உலகக் கோப்பை வெல்லும் திட்டம்!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Sports ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
ஆஸி. அணியின் பயிற்சியாளராக மைக் ஹசி நியமனம்..! ஆஷஸ், உலகக் கோப்பை வெல்லும் திட்டம்!

ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக மைக்கேல் ஹசி நியமிக்கப்பட்டுள்ளது குறித்து... மைக்கேல் ஹசி - படம்: கிரிக்கெட்.காம்.ஏயு முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான மைக்கேல் ஹசியை பேட்டிங் பயிற்சியாளராக கிரிக்கெட் ஆஸ்திரேலியா நியமித்துள்ளது. இவர் சமீபத்தில் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார். இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கு முன்பாக மைக்கேல் ஹசி ஆஸ்திரேலிய அணியில் கன்சல்டன்ட் பயிற்சியாளராக (consultant coach) சேருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது டெஸ்ட் போட்டிகளில் 51க்கும் அதிகமான சராசரியை வைத்திருந்த மைக்கேல் ஹசி இனிவரும் இரண்டாண்டுகளுக்கு ஆஸ்திரேலிய அணிக்கு பயிற்சியாளராக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு ஆஷஸ், ஒருநாள் உலகக் கோப்பை என பல முக்கியமான தொடர்களில் ஆஸ்திரேலிய அணி விளையாட இருக்கிறது. ஆஸ்திரேலியாவின் ஹால் ஆஃப் ஃபேம் (வாழ்நாள் சாதனையாளர்) விருது வென்றுள்ள இவர் அடுத்த டி20 தொடர் முதல் பயிற்சியாளராக பொறுப்பேற்பார். முக்கியமாக ஒலிம்பிக்ஸ் மற்றும் 2028 டி20 உலகக் கோப்பைக்கு ஆலோசகராக செயல்படுவார். கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் பொது மேலாளர் பென் ஆலிவர், “மைக்கேல் ஹசி டி20யில் ஆலோசகராகவும் சிறப்பான திட்டமிடலையும் ஆலோசனையும் வீரர்களுக்கு வழங்குவார். வீரர்களுக்கான தேர்விலும் செயல்பாட்டிலும் அவர் முக்கியமான பங்களிப்பார்” எனக் கூறியுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்காக 302 போட்டிகளில் 2005 முதல் 2013 வரை விளையாடியுள்ளார். ஒருநாள் உலகக் கோப்பை 2007, ஆஷஸ் 2006-07 ஒயிட்வாஷில் பங்காற்றியுள்ளார். ஆஸ்திரேலியா - இங்கிலாந்துக்கான ஒருநாள் டி20 தொடருக்கான முதல் போட்டி நவ.13, பெர்த் திடல், இரண்டாவது ஒருநாள்: நவ.15, அடிலெய்டு திடல், மூன்றாவது ஒருநாள்: நவ.18, ஹோபர்ட் திடல்களில் நடைபெற இருக்கின்றன. டி20 போட்டிகள் நவ.21 முதல் டிச.2ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றன. ஆஸ்திரேலிய ஒருநாள் அணி: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சேவியர் பார்ட்லெட், மஹ்லி பியர்ட்மேன், அலெக்ஸ் கேரி, கூப்பர் கானலி, ஜாக் எட்வர்ட்ஸ், கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், ஸ்பென்சர் ஜான்சன், ஆலி பீக், மேத்யூ ரென்ஷா, லியாம் ஸ்காட், ஆடம் ஜாம்பா. இங்கிலாந்து ஒருநாள் அணி: ஹாரி புரூக் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், சோனி பேக்கர், டாம் பாண்டன், ஜேக்கப் பெத்தேல், ஜோர்டான் காக்ஸ், ஹென்றி குரோகோம்ப், சாம் கர்ரன், லியாம் டாசன், பென் டக்கெட், வில் ஜாக்ஸ், ஜேமி ஓவர்டன், அடில் ரஷித், ஜோ ரூட், ஜோஷ் டங் ஆஸ்திரேலியா டி20 அணி: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சேவியர் பார்ட்லெட், மஹ்லி பியர்ட்மேன், நிகில் சௌத்ரி, டிம் டேவிட், ஜோயல் டேவிஸ், ஜாக் எட்வர்ட்ஸ், நாதன் எல்லிஸ், ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க், சாம் ஹார்ப்பர், ஸ்பென்சர் ஜான்சன், மிட்ச் ஓவன், லாக்லான் ஷா, ஆடம் ஜாம்பா இங்கிலாந்து டி20 அணி: ஹாரி புரூக் (கேப்டன்), டாம் பான்டன், ஜேக்கப் பெத்தேல், ஜேம்ஸ் கோல்ஸ், ஜோர்டான் காக்ஸ், ஹென்றி குரோகோம்ப், சாம் கரன், லியாம் டாசன், அனியூரின் டொனால்ட், எடி ஜாக், வில் ஜாக்ஸ், ஜேமி ஓவர்டன், ஆதில் ரஷித், தாமஸ் ரியூ, பில் சால்ட், லூக் வுட். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை