பெரியார் அறிவுலகம்: சில அதிகாரிகள் - பதிப்பாளர்களின் கூட்டு ஊழலா? மனுஷ்ய புத்திரன் குற்றச்சாட்டு

📅 📍 Coimbatore, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
பெரியார் அறிவுலகம்: சில அதிகாரிகள் - பதிப்பாளர்களின் கூட்டு ஊழலா? மனுஷ்ய புத்திரன் குற்றச்சாட்டு

பெரியார் அறிவுலகத்தில் புத்தகம் கொள்முதலில் ஊழல் நடந்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன் பதிவு... பெரியார் அறிவுலகம். - DNS கோவை பெரியார் அறிவுலகத்தில் புத்தகம் கொள்முதலில் ஊழல் நடந்திருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும் சில அதிகாரிகள் - சில பதிப்பாளர்களின் கூட்டின் மூலமே இது நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்றும் எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன் கூறியுள்ளார். கோவையில் திமுக ஆட்சியில் கட்டப்பட்டு, கடந்த மாதம் முதல்வர் ச. ஜோசப் விஜய்யால் திறந்துவைக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்துக்கு கொள்முதல் செய்யப்பட்ட நூல்களில் ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போலி பதிப்பகம் பெயரில் போலி எழுத்தாளர்கள், தவறான தகவல்கள் என 1,500 -க்கும் மேற்பட்ட நூல்கள் இடம்பெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், இதுதொடர்பாக விசாரணை தொடங்கியுள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார். இந்நிலையில் திமுக ஆட்சியில் சென்னை மாநகர நூலக ஆணைக் குழுவின் தலைவராக இருந்தவரும் எழுத்தாளர் - கவிஞருமான மனுஷ்ய புத்திரன் இதுபற்றி தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். "கோவை பெரியார் அறிவுலகத்திற்கு முறைகேடாக கொள்முதல் செய்யப்பட்ட நூல்கள் குறித்த பெருமாள் முருகனின் கட்டுரை மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. கடந்த திமுக அரசு வெளிப்படையான நூலக கொள்முதல் கொள்கையை செயல்படுத்தி பொது நூலகத் துறையை சூறையாடி வந்த ஊழல் பெருச்சாளிகளுக்கு முடிவு கட்டிய சூழலில் இப்போது ஒரு ஊர் பேர் தெரியாத பதிப்பகத்திடம் பெரும் தொகைக்கு போலி நூல்கள் பெரியார் அறிவுலகத்திற்கு வாங்கப்பட்டிருக்கும் செய்தி பொது நூலகத்துறையை காலகாலமாக சீரழித்துவந்த சக்திகள் மீண்டும் களத்திற்கு வந்திருப்பதையே காட்டுகிறது. சில அதிகாரிகள்- சில பதிப்பாளர்களின் கூட்டின் மூலமே இது நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது. இந்நிலையில் கீழ்கண்ட உடனடி நடவடிக்கைகள் தேவை 1. பெரியார் அறிவுலகம் போன்ற சிறப்பு நூலகங்களுக்கு நூல்கள் கொள்வது செய்யப்பட்டதற்கு பொதுவான விதிமுறைகள் ஏதும் பின்பற்றப்பட்டதா என்பதைக் கண்டறிய வேண்டும். 2. வாங்கப்பட்ட நூல்கள் எந்த தரத்தினாலானது என்பதை மதிப்பிடுவதற்கு எழுத்தாளர்கள், சிந்தனையாளர்களைக் கொண்ட ஒரு குழு உடனடியாக அமைக்கப்பட வேண்டும். 3. போலி முகவரி அல்லது போலி ஐஎஸ்பிஎன் (ISBN) மூலமாக நூல்கள் விநியோகிக்கப்பட்டு இருந்தால் அந்த பதிப்பகத்தின் மேல் உடனடியாக சட்ட நடவடிக்கை தேவை. 4. சந்தேகத்திற்கு இடமான வகையில் ஏதேனும் ஒரு பதிப்பகத்தின் நூல் அதிக அளவில் வாங்கப்பட்டிருந்தாலோ அல்லது நிர்ணயிக்கப்பட்ட விலையைத் தாண்டி அதிக விலைக்கு வாங்கப்பட்டிருந்தாலோ அந்த நூலக ஆணையை வழங்கிய அதிகாரிகள் மேல் நடவடிக்கை தேவை. 5. பிழையான, போலியான புத்தகங்களை வழங்கிய பதிப்பாளருக்கு வழங்கப்பட்ட நூலக ஆணை ரத்து செய்யப்பட்டு அந்தப் பணம் திரும்பப் பெறப்பட்டு அந்த நூல்கள் நூலகத்திலிருந்து அகற்றப்பட வேண்டும். எங்களைப் போன்ற பதிப்பாளர்கள் ஒரு புத்தகத்தை உருவாக்குவதற்கும் அதை விற்பதற்கும் படாதபாடுபட்டு செத்துக்கொண்டிருக்கிறோம். சில நூறு புத்தகங்களை விற்பதற்காக ஊர் ஊராய் புத்தகக் கண்காட்சிகளைத் தேடி அலைகிறோம். ஆனால் சில வழிப்பறிக்கொள்ளையர்கள் அசலான பதிப்பகங்களுக்கு வரவேண்டிய நூலக ஆணைகளை பறித்துக்கொள்வதுடன் நூலகங்களை குப்பைக் கிடங்காக்கி அறிவு சால் இயக்கத்திற்கு புதைகுழி தோண்டுகிறார்கள்" என்று பதிவிட்டுள்ளார். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை