நடிகர்கள் ரன்பீர் கபூர், யஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ராமாயணா திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து... ராமாயணா: முதல் பாகம் படத்தின் போஸ்டர் - படம்: எக்ஸ் / சோனி பிக்சர்ஸ் நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியாகியுள்ள ’ராமாயணா: முதல் பாகம்’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் ரூ. 155 கோடி என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. நமீத் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோகஸ் ஸ்டூடியோஸ் உடன் டிஎன்இஜி மற்றும் யஷ்ஹின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இணைந்து இந்தப் படம் தயாராகியுள்ளது. நிதீஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர், சீதையாக சாய் பல்லவி, ராவணன் கதாபாத்திரத்தில் யஷ், மண்டோதரியாக காஜல் அகர்வால், சூர்ப்பனகையாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார்கள். இந்தப் படத்துக்கான விமர்சனங்கள் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில், முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ. 155 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. தீபாவளிக்கு முன்னதாக வெளியான இந்திய படங்களில் அதிக வசூலித்த படமாக ராமாயணா வரலாற்றுச் சாதனை படைத்ததாக படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் அடுத்தாண்டு வெளியாக இருக்கிறது. ஏற்கெனவே இந்தப் படத்தின் படப்பிடிப்பும் நிறைவடைந்தது கவனிக்கத்தக்கது. Yeh Ram ke Yug ka Aarambh hai! ð¹Thank you for making Ramayana a historic celebration and an epic for the ages. Keep the love coming! ðBook your tickets now!Ramayana, now playing in cinemas worldwide, across all premium formats. pic.twitter.com/B3ntOqeF0d தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
முதல் நாள் வசூலில் வரலாற்றுச் சாதனை படைத்த ராமாயணா..! அதிகாரபூர்வ அறிவிப்பு!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Entertainment
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗