பெரியார் நூலகத்திற்கு விதிகளை மீறி முறையற்ற வகையில் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுப்பிய குற்றச்சாட்டு குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்மோகன் பெரியார் நூலகத்திற்காகப் பொருத்தமற்ற மற்றும் சம்பந்தமில்லாத நூல்களை முறையான விதிமுறைகளைப் பின்பற்றாமல் வாங்கியதன் மூலம் மக்களின் வரிப் பணம் பெருமளவில் மோசடி செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். அறிவுசார் தளத்தில் இதுபோன்ற ஊழல்கள் ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறிய அமைச்சர் தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
காணொளி: 'பெரியார் நூலகப் புத்தக கொள்முதலில் ஊழல்' - அமைச்சர் ராஜ்மோகன் கூறியது என்ன?