நெருங்கும் தீபாவளிப் பண்டிகைக்கு இடையே மதுரை மலர்ச் சந்தையில் பூக்களின் விலை நிலவரம் பூக்களின் விலை உயா்வு - கோப்பிலிருந்து மதுரை: தீபாவளிப் பண்டிகை நெருங்கும் வேளையில், மதுரை மலர்ச் சந்தையில் பூக்களின் இன்றைய விலை நிலவரம் வெளியாகியிருக்கிறது. தீபாவளி மற்றும் கேதார கௌரி விரதம் கொண்டாடப்படவிருக்கும் நிலையில், பொதுவாகவே சந்தைகளில் பூக்களின் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளது. மதுரையில் பூக்கள் விலை குறைந்திருந்த நிலையில் தற்போது சற்று அதிகரித்துள்ளது. மதுரை மல்லி கிலோ ரூ.1400, பிச்சி ரூ.1000, முல்லை ரூ.1000, செவ்வந்தி ரூ.150, சம்பங்கி ரூ.200, செண்டு மல்லி ரூ.60, கனகாம்பரம் ரூ.1500, ரோஸ் ரூ.150, பட்டன் ரோஸ் ரூ.200, பன்னீர் ரோஸ் ரூ.250, கோழிக்கொண்டை ரூ.90, அரளி ரூ.500, மரிக்கொழுந்து ரூ.120, தாமரை (ஒன்றுக்கு) ரூ.40 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாட்டுத்தாவணி மீனாட்சி மொத்த பூ வியாபாரிகள் கூறுகையில், 'பூக்களின் விளைச்சல் சமாராக உள்ளது. இதனால் வரத்து 3 டன்னாக உள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கி வருகின்ற காரணத்தால் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்து காணப்படுகிறது. தீபாவளி வரை இதே விலை நிலவரம் நீடிக்கும். அடுத்த வாரத்தில் பூக்களின் விலை குறைய வாய்ப்பு உண்டு. திருமண முகூர்த்தத்தை ஒட்டி பூக்களின் விலை உயரக்கூடும் எனத் தெரிவித்தனர். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
நெருங்கும் தீபாவளி! மதுரை மலர்ச் சந்தையில் பூக்களின் விலை நிலவரம்!
📅
📍 Madurai, Tamil Nadu
🏷️ Business
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗