சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக விவகாரம்; உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நான் வரவேற்கிறேன்: ப. சிதம்பரம்

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக விவகாரம்; உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நான் வரவேற்கிறேன்: ப. சிதம்பரம்

சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக ப. சிதம்பரம் கூறியிருப்பது தொடர்பாக... சிதம்பரம் நடராஜர் கோயில் - கோப்புப்படம் நவம்பர் 5 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தில் நிலவும் சீர்கேடுகளைக் களையும் வகையில், நிர்வாகத்தைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும், கோயில் நிர்வாகத்தின் கணக்கு வழக்குகளை மாதந்தோறும் அந்தக் குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது. கோயில் நிர்வாகத்தில் உள்ள சீர்கேடுகள் களையப்படும் வரை இந்தக் குழு கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு கோயிலை நிர்வகிக்க முன்னாள் நீதிபதிகள் கொண்ட குழுவை உயர்நீதிமன்றம் அமைத்ததற்கு எதிராக பொது தீட்சிதர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீடு மனு புதன்கிழமை(நவ.4) இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசின் தலையீட்டில் இருந்து மீட்க வேண்டும். கோயிலுக்கு அரரால் தான் பாதிப்பு ஏற்படுகிறது என்று தீட்சிதர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. கோயில் நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும், கனகசபையில் பக்தர்கள் தரிசனத்திற்கு தீட்சிதர்கள் தடை ஏற்படுத்துவதாக தமிழ அரசு தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்ற அமர்வு, நிர்வாகம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவு தொடர்பான வழக்கில் இடைக்காலத் தடை விதித்தது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு உயர்மட்ட குழு மற்றும் தொல்லியல் துறை உள்ளிட்ட அமைப்பு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. மேலும், காவலில் வைப்பதற்கும் கைது செய்வதற்கும் உள்ள வேறுபாடுகள் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த முந்தைய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஆய்வு செய்து மாற்றி அமைத்துள்ளது. ப. சிதம்பரம் வரவேற்பு இந்த நிலையில், அடிப்படை உரிமைகள் மற்றும் காவலில் வைப்பது குறித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பை தவறு என்று உச்ச நீதிமன்றம் முடிவு எடுத்திருப்பதை காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: உச்ச நீதிமன்றத்தின் 5.11.2026 தீர்ப்பு சென்னை உயர்நீதிமன்றத்தின் முந்தையத் தீர்ப்பைத் தவறு என்று முடிவெடுத்திருப்பதை நான் வரவேற்கிறேன். 'காவல்' வேறு, 'கைது' வேறு என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு எனக்கு வியப்பளித்தது. அடிப்படை உரிமைகளைப் பொறுத்த வரை ஒரு மனிதனைக் 'காவலில்' வைப்பதும் 'கைது' செய்வதும் ஒன்று தான் என்று உச்ச நீதிமன்றம் தெளிவாக விளக்கியிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு மனித உரிமையையும் அடிப்படை உரிமையையும் நிலை நாட்டியிருக்கிறது என அவர் கூறியுள்ளார். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை