ஆட்சியைக் கவிழ்க்க பேரம் பேசியதாக கைது செய்யப்பட்ட மன்னனும் எம்எல்ஏ முஸ்தபாவும் நண்பர்கள் என செல்லூர் ராஜு கூறியது குறித்து... தவெக எம்எல்ஏ முஸ்தபா | முன்னாள் துணை மேயர் மன்னன் தவெக ஆட்சியைக் கவிழ்க்க பேரம் பேசியதாக கைது செய்யப்பட்ட மதுரை முன்னாள் துணை மேயர் மன்னனும் தவெக எம்எல்ஏ முஸ்தபாவும் நண்பர்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களுடன் செல்லூர் ராஜு பேசியதாவது, தவெக எம்எல்ஏ முஸ்தபாவும் மன்னனும் நெருங்கிய நண்பர்கள். தவெகவில் நிர்வாகிகளை விலைக்கு வாங்குவதாக சமூக ஊடகங்களில் பரவி வருவதாக எம்எல்ஏ முஸ்தபாவிடம் தொலைபேசியில் மன்னன் பேசியுள்ளார். இந்தச் சம்பவத்தில்தான் மன்னனின் பேச்சைத் திரித்து, அவர் மீது பொய்யான வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே குதிரை பேரத்தால்தான் இந்த அரசு இயங்கிக் கொண்டிருக்கிறது. மக்களுக்கு எதுவுமே செய்யாத அரசு. தவெக எம்எல்ஏ-க்களுக்கு பணம் கொடுத்து தவெக அரசைக் கலைப்பது அதிமுகவின் நோக்கம் அல்ல. இருப்பினும், ஆட்சியாளர்களின் நிர்வாகத் திறனின்மையால் இந்த அரசே கவிழ்ந்து விடும். எம்எல்ஏ முஸ்பதா யோக்கியனும் அல்ல; அரிச்சந்திரனும் அல்ல. தவெக நிர்வாகிகள் நியமனத்தில் பணம் வசூலிக்கப்படுவதாக முஸ்தபா மீது புகார் உள்ளது. அதனை அவரும் மறுக்கவில்லை. தவெக ஆட்சியின் மீதான அவப்பெயரை இதுபோன்ற சம்பவங்களால் மூடிமறைக்க முயற்சிக்கின்றனர்" என்று தெரிவித்தார். சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு எதிராக வாக்களிக்க தன்னிடம் ரூ. 30 கோடி பேரம் பேசியதாக அதிமுக நிர்வாகியும் மதுரை மாநகர் முன்னாள் துணை மேயருமான மன்னன் மீது மதுரை மத்திய தொகுதி தவெக எம்எல்ஏ முஸ்தபா புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மன்னனிடம் விசாரணை நடத்தியதுடன் அவரை கைது செய்தனர். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆட்சியைக் கவிழ்க்க ரூ. 30 கோடி பேரம்! எம்எல்ஏ முஸ்தபாவும் மன்னனும் நண்பர்கள்: செல்லூர் ராஜு
📅
📍 Madurai, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗