மேகமலையை ஆய்வு செய்ய பி.ஆர். கவாய் தலைமையில் குழு அமைக்க உத்தரவிட்டிருப்பது பற்றி... உச்சநீதிமன்றம் - கோப்புப்படம் மேகமலை வனப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையில் குழு அமைக்க உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம், மேகமலை வனப் பகுதியில் 4,601 போ், 5,072 ஹெக்டா் நிலத்தை ஆக்கிரமித்துள்ளனா். இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், ஆக்கிரமிப்பு செய்தவர்களை வெளியேற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, மேகமலை விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்திய நிலையில், தில்லி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சில ஆதாரங்களை தாக்கல் செய்தது. இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், மேகமலை வனப் பகுதியை ஆய்வு செய்ய நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்க உத்தரவிட்டுள்ளது. 5 மாதங்களுக்குள் குழு அமைக்கப்பட்டு, மேகமலை ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பழங்குடியினர் யார்? மற்றவர்கள் எத்தனை பேர்? போன்றவற்றை பி.ஆர். கவாய் குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மேகமலையில் உள்ள கிராமங்களில் 30 நாள்களுக்குள் கிராம சபைகளை உருவாக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பி.ஆர். கவாய் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மேகமலை வழக்கு! ஓய்வுபெற்ற நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையில் குழு!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗