லாஸ் ஏஞ்சலிஸ் மேயர் தேர்தலில் வென்ற 'கேரளத்தில் வென்ற தமிழ்ப் பெண்' - சென்னையில் ஆற்றிய பணிகள் என்ன?

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: bbc.com (original report) ↗
லாஸ் ஏஞ்சலிஸ் மேயர் தேர்தலில் வென்ற 'கேரளத்தில் வென்ற தமிழ்ப் பெண்' - சென்னையில் ஆற்றிய பணிகள் என்ன?

பட மூலாதாரம், Getty Images அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகர மேயர் தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நித்யா ராமன் வெற்றி பெற்றுள்ளார். "லாஸ் ஏஞ்சலிஸ் கவுன்டியில் வசிக்கும் மக்களில் மூன்றில் ஒரு பங்கினர் புலம்பெயர்ந்தவர்கள். அவர்களில் ஒருவராக என்னை அடையாளப்படுத்திக் கொள்வதில் பெருமை கொள்கிறேன். நான் இந்தியாவில் பிறந்தேன். எனக்கு ஆறு வயதாக இருந்தபோது எனது குடும்பம் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தது". ஜனநாயக சோசலிசவாதியான நித்யா ராமன் தனது அதிகாரப்பூர்வ தேர்தல் பிரசார இணையதளப் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 'லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக அதிபர் டிரம்ப் முன்னெடுக்கும் கடுமையான நடவடிக்கைகளை எதிர்ப்பது தனது பிரதான நோக்கங்களில் ஒன்று' என பிரசாரத்தில் குறிப்பிட்டிருந்தார் நித்யா ராமன். பட மூலாதாரம், NithyaRaman/Facebook கேரளத்தின் திருச்சூரில் 28 ஜூலை, 1981-இல் ஒரு தமிழ் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர் நித்யா ராமன். அவரது தந்தை வெங்கட்ராமன் கேரள மாநிலத்தின் பொதுத்துறை நிறுவனமான கெல்ட்ரான்-இல் பணிபுரிந்தவர். திருச்சூர் பகுதியைச் சேர்ந்த தாயார் சுதா இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணிபுரிந்தார். அவரது உறவினர்கள் தற்போதும் திருவனந்தபுரத்தில் வசித்துவருகிறார்கள். "கேரளத்தில் பிறந்த நித்யா, அமெரிக்காவில் நகர்ப்புறத் திட்டமிடல் மற்றும் பொதுச் சேவையில் தனது முத்திரையைப் பதித்து, தற்போது வரலாற்றில் தன் பெயரைப் பொறித்துள்ளார். அவரது பயணம் சர்வதேச மலையாளி சமூகத்திற்கு ஒரு பெரும் உத்வேகமாக விளங்குகிறது" என கேரளத்தின் முதலமைச்சர் வி.டி.சதீசன் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார். லாஸ் ஏஞ்சலிஸ் மேயர் தேர்தலில் நித்யா ராமன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஊடகங்களிடம் பேசிய அவரது உறவினர் வித்யா சங்கர், "நாங்கள் சில தலைமுறைகளுக்கு முன்பாக தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்கு குடிபெயர்ந்தோம். ஆறு வயது வரை நித்யா படித்தது, வளர்ந்தது எல்லாம் இங்கே திருவனந்தபுரத்தில் தான்." End of அதிகம் படிக்கப்பட்டது "அவரது அப்பா ஐஐடி பாம்பே-இல் கல்வி பயிலச் சென்றார். பிறகு அமெரிக்காவிற்குச் சென்றார். அவர் சென்று ஒரு வருடம் கழித்து நித்யாவும் அவரது அம்மாவும் அமெரிக்கா சென்றார்கள்" எனக் கூறினார். பட மூலாதாரம், Getty Images பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு இந்தியாவில் உள்ள உறவினர்களுடனான தனது தொடர்பு குறித்து ஒரு நேர்காணலில் பேசிய நித்யா ராமன், "இந்தியாவில் கழித்த என் குழந்தைப் பருவம் நினைவில் உள்ளது. என் இளமைப் பருவத்தின் குறிப்பிட்ட ஆண்டுகள் அங்கு தான் கழிந்தன." "என் தந்தைவழிப் பாட்டி இரண்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தார், ஆனாலும் தினமும் செய்தித்தாளை முழுமையாக வாசிப்பார்; எனக்குத் தெரிந்த எவரை விடவும் அரசியலை நன்கு அறிந்தவராகவும் அதில் அதிக ஈடுபாடு கொண்டவராகவும் இருந்தார். எனது தற்போதைய பணியை அவருடைய அந்த ஆர்வத்தின் நேரடித் தொடர்ச்சியாகவே நான் பார்க்கிறேன், அதுவே இந்த வேலையைச் செய்ய எனக்கு உத்வேகம் அளிக்கிறது" எனக் கூறியிருந்தார். அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்த பிறகு முதலில் லூசியானாவிலும் பின்னர் பாஸ்டன் பகுதியிலும் (பர்லிங்டன், மாசசூசெட்ஸ்) நித்யா ராமனின் குடும்பம் குடியேறியது. தனது 22வது வயதில் அவர் அமெரிக்க குடியுரிமை பெற்றார். "பாஸ்டன் பகுதியில் ஒரு மிகப்பெரிய இந்திய சமூகத்தோடு நான் வளர்ந்தேன். அங்கு தமிழ் சங்கம், கேரள சங்கம், குஜராத்தி சங்கம் என இந்திய கலாசாரம் நிறைந்திருந்தது" என ஒரு சமீபத்திய நேர்காணலில் பேசியிருந்தார் நித்யா ராமன். பட மூலாதாரம், Getty Images நித்யா ராமன், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியல் துறையில் இளங்கலைப் பட்டமும், பின்னர், மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் (எம்ஐடி) நகர்ப்புறத் திட்டமிடல் துறையில் முதுகலைப் பட்டமும் (2008) பெற்றார். 2010இல் சென்னையைச் சேர்ந்த வாலி சந்திரசேகரன் என்பவரை நித்யா ராமன் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். லாஸ் ஏஞ்சலிஸ் டைம்ஸ் நாளிதழின் தகவலின்படி, நித்யா ராமனும் வாலி சந்திரசேகரனும் 1999ஆம் ஆண்டு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பு பயின்று கொண்டிருந்த போது முதன்முதலில் சந்தித்தனர். வாலி சந்திரசேகரன் அமெரிக்க தொலைக்காட்சித் தொடர்களில் எழுத்தாளராகப் பணியாற்றிவருகிறார். பிரபல அமெரிக்க 'சிட்-காம்' தொடரான 'தி ஆஃபீஸ்'-இல் ஒரு சிறு வேடத்திலும் இவர் நடித்துள்ளார். நித்யா ராமன் தற்போது குடும்பத்துடன் லாஸ் ஏஞ்சலிஸ் நகரின் சில்வர் லேக் பகுதியில் வசித்து வருகிறார். பட மூலாதாரம், NithyaRaman/Facebook தனது கல்லூரி காலத்திலும், அமெரிக்க அரசியலில் தீவிரமாக பங்கெடுப்பதற்கு முன்பும், இந்தியாவில் பல சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதாக நித்யா ராமன் நேர்காணல்களில் தெரிவித்துள்ளார். "2010ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவதற்கு முன்பு நான் டெல்லியில் இருந்தேன். அப்போது, யமுனை நதிக்கரையோர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கைகள் குறித்து படித்திருந்தேன். அந்த நடவடிக்கைகளால் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை இழந்திருந்தனர்." என அவர் 2020இல் அளித்த ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார். "அதன்பிறகு, குடிசைப் பகுதிகளில் செயல்படும் அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினேன். குடியிருப்புகள் அகற்றப்படுவதை எதிர்த்துப் போராடியதுடன், அடிப்படை வசதிகளைக் கோரியும் குரல் கொடுத்தேன். அரசின் முடிவுகள், ஏராளமான மக்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் எவ்வாறு எதிர்மறையாகப் பாதிக்கின்றன என்பதை நேரில் கண்டபோது, நகர்ப்புற நிர்வாகம் எந்த அளவுக்கு முக்கியமானது என்பதை உணர்ந்தேன். அதுவே நகர்ப்புறத் திட்டமிடல் குறித்து படிக்க என்னைத் தூண்டியது." என்றும் அவர் கூறியிருந்தார். பட மூலாதாரம், Transparent Chennai/Facebook நித்யா ராமன் சில நேர்காணல்களில் சென்னையில் தான் ஆற்றிய சமூகப் பணிகள் குறித்து குறிப்பிட்டுள்ளார். 2015இல் 'சென்னையில் பத்தாண்டுகளில் (2005-2015) வெளியேற்றப்பட்ட (குடிசைப் பகுதி) மக்கள் குறித்து ஓர் ஆய்வுக் கட்டுரை' நித்யா ராமனின் பெயரில் வெளியிடப்பட்டது. "குடிசைப் பகுதி மக்களை வேறு இடங்களுக்கு மாற்றும்போது அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்றும், புதிய குடியிருப்புகளில் தொடக்கத்திலிருந்தே அடிப்படை வசதிகள் உறுதிசெய்யப்பட வேண்டும் என்றும்" அந்த ஆய்வு வலியுறுத்துகிறது. "நித்யா ராமன் கலாக்ஷேத்ராவில் பரதநாட்டியம் பயின்றார். திருமணம் முடிந்த பிறகு சென்னைக்கு வந்து 'டிரான்ஸ்பரன்ட் சென்னை' என்ற அமைப்பைத் தொடங்கி, பணியாற்றினார்" என நித்யா ராமனின் உறவினர் வித்யா சங்கர் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார். "டிரான்ஸ்பரன்ட் சென்னை, உங்கள் நகரத்தைப் பற்றிய பயனுள்ள, எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய தகவல்களை வழங்குகிறது. இத்தகவல்கள் அரசின் பொறுப்புணர்வை மேம்படுத்தி, குடிமக்களுக்கு உதவிகரமாக அமையும்" என அதன் சமூக ஊடக பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம், Transparent Chennai/Facebook நித்யா ராமன் அங்கம் வகித்த குழுக்கள் சென்னையில் குறிப்பாக நங்கநல்லூர், அடையாறு, பெசன்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளில், போக்குவரத்து, பாதசாரிகள் பாதுகாப்பு, கழிவு மேலாண்மை, பொதுக் கழிப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வுகளை மேற்கொண்டன என 'டிரான்ஸ்பரண்ட் சென்னை'யின் சமூக ஊடகப் பதிவுகள் தெரிவிக்கின்றன. 'டிரான்ஸ்பரன்ட் சென்னை' கள ஆய்வுகளில் நித்யா ராமனுடன் இணைந்து பணியாற்றிய சென்னை நங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ராமா ராவ், "சென்னை நகரத்தை மேம்படுத்துவது தான் அப்போது நித்யா ராமன் மேற்கொண்ட ஆய்வுகளின் நோக்கம். நகர்ப்புறத் திட்டமிடல் குறித்த ஒரு தெளிவான பார்வை அவரிடம் இருந்தது" என்றார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "குறிப்பாக 2010-2015 காலகட்டத்தில், உள்ளூர் மக்களுடன் இணைந்து தான் இந்தப் பணிகளை அவர் மேற்கொண்டார். பின்னர், அந்த ஆய்வு முடிவுகளையும் பரிந்துரைகளையும் பெருநகர சென்னை மாநகராட்சியிடம் சமர்பித்தோம், அதனடிப்படையில் சில நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன" என்கிறார். "நான் அமெரிக்காவின் எம்ஐடி-இல் முதுகலை கல்வி பயின்ற போது, டெல்லி மற்றும் சென்னைக்கு அடிக்கடி பயணம் செய்து கொண்டிருந்தேன். அங்கு வாழ்ந்து வந்த அடித்தட்டு மக்களின் பிரச்னைகளில் நாங்கள் கவனம் செலுத்தினோம். குடிசைப் பகுதி மக்களை வெளியேற்றுவதற்கு எதிராகப் போராடினோம்" என ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார் நித்யா ராமன். இத்தகைய பணிகள் தவிர்த்து, குடும்ப நிகழ்வுகளுக்காகவும் நித்யா ராமன் அவ்வப்போது இந்தியா வருவார் என அவரது உறவினர்கள் தெரிவிக்கிறார்கள். 2020ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலிஸ் நகர சபைத் தேர்தலில் போட்டியிட்ட நித்யா ராமன், அதில் வெற்றி பெற்றார். அதன் மூலம் நகர சபையில் அங்கம் வகிக்கும் முதல் ஆசிய-அமெரிக்கப் பெண் மற்றும் முதல் தெற்காசியர் என்ற பெருமையை அவர் பெற்றார். மார்ச் 2024இல், இரண்டாவது முறை நகர சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நித்யா ராமன், தற்போது மேயர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை