நடிகர் கமல் ஹாசனின் புதிய படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து... சண்டியர் படத்தின் போஸ்டர் - எக்ஸ் நடிகர் கமல் ஹாசன் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை உறுப்பினரும், நடிகருமான கமல் ஹாசன் தயாரித்து நடிக்கும் புதிய படத்தை, “சித்தா”, “வீரதீர சூரன்” ஆகிய படங்களின் இயக்குநர் சு. அருண் குமார் இயக்குகின்றார். காவல்துறை சார்ந்த பழிவாங்கும் கதைகளத்துடன் உருவாகி வருவதாகக் கூறப்படும் இந்தப் புதிய படத்துக்கு, “சண்டியர்” எனப் பெயரிடப்பட்டுள்ளது. நடிகர் கமலின் புதுமையான தோற்றத்தில் இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழுவினர் இன்று (நவ. 6) மாலை வெளியிட்டுள்ளனர். இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவாகும் இந்தப் படத்துக்கு அன்பறிவ் சகோதரர்கள் சண்டைப் பயிற்சி அளிக்கின்றனர். ஏற்கெனவே, கடந்த 2004 ஆம் ஆண்டு கமல்ஹாசன் இயக்கி நாயகனாக நடித்து வெளியான “விருமாண்டி” படத்துக்கு முதலில் “சண்டியர்” எனப் பெயர் சூட்டப்பட்டது. இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படும் அந்தப் படத்துக்கு, சண்டியர் எனப் பெயர் வைக்கப்பட்டதற்குப் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததால் படத்தின் பெயர் மாற்றப்பட்டது. இதையடுத்து, சுமார் 22 ஆண்டுகளுக்குப் பிறகு தான் தயாரித்து நடிக்கும் புதிய படத்துக்கு நடிகர் கமல் ஹாசன் “சண்டியர்” எனப் பெயர் சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. SANDIYAR à®à®£à¯à®à®¿à®¯à®°à¯ ð¥#KamalHaasan #SUArunkumar #Sandiyar #à®à®£à¯à®à®¿à®¯à®°à¯#SandiyarSambavam #HappyBirthdayKamalHaasan #HBDKamalHaasan #CelebratingKamalHaasan @ikamalhaasan #Mahendran @anirudhofficial @anbariv #SunilKS @amritharam2 #CSBalachandar @AKunjamma @RohanShrestha @RKFI⦠pic.twitter.com/wxHpi4TWyc தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
22 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சர்ச்சையா? கமல் ஹாசனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Entertainment
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗