உள்நாட்டில் சாதித்தும் சர்ஃபராஸ், ரிங்கு சிங்கிற்கு இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்காதது ஏன்? நிபுணர்களின் பார்வை

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: bbc.com (original report) ↗
உள்நாட்டில் சாதித்தும் சர்ஃபராஸ், ரிங்கு சிங்கிற்கு இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்காதது ஏன்? நிபுணர்களின் பார்வை

பட மூலாதாரம், Getty Images முதல்தர கிரிக்கெட்டில் அதிக பேட்டிங் சராசரி கொண்ட வீரர்களின் பட்டியலில் இந்தியாவின் சர்ஃபராஸ் கான் 8 ஆவது இடத்திலும், ரிங்கு சிங் 11 ஆவது இடத்திலும் உள்ளனர். இருப்பினும், இருவருக்கும் தற்போதைய இந்திய டெஸ்ட் அணியில் இடமில்லை. சமீபத்திய ஃபார்மைக் கருத்தில் கொண்டாலும், ரஞ்சி டிராபியில் கடைசியாக விளையாடிய போட்டிகளில் இருவருமே சதம் விளாசியுள்ளனர். ஆனாலும், இந்தியா ஏ அணிக்கு கூட அவர்களுடைய பெயர் பரிசீலிக்கப்படவில்லை. அதேசமயம், முதல்தர கிரிக்கெட்டில் 45-க்கும் குறைவான சராசரி வைத்துள்ள சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல் போன்றவர்களுக்கு டெஸ்ட் அணியில் இடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்திய அணிக்கு ஒரு வீரர் எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார் என்ற கேள்வி எழுகிறது. உள்ளூர் போட்டிகளில் ரன் மெஷினாகத் திகழும் சர்ஃபராஸ் கான் 65 முதல்தர போட்டிகளில் 64.02 என்ற சராசரியில் 5314 ரன்கள் குவித்துள்ளார். 70.67 ஸ்ட்ரைக் ரேட்டில் 18 சதங்களும் 16 அரைசதங்களும் எடுத்துள்ளார். முதல்தர கிரிக்கெட்டில் அவருடைய அதிகபட்ச ஸ்கோர் 301 ஆகும். பட மூலாதாரம், Getty Images 2024 இல் இங்கிலாந்துக்கு எதிராக ராஜ்கோட் டெஸ்டில் அறிமுகமான சர்ஃபராஸ் கான், தனது முதல் இன்னிங்ஸிலேயே அதிரடியாக விளையாடி அரைசதம்(66) அடித்தார். அதே ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான பெங்களூரு டெஸ்டில் தனது முதல் சதத்தை பதிவுசெய்தார். ஆனால், அந்தத் தொடரில் இந்தியா 4-0 என படுதோல்வி அடைந்த நிலையில், அடுத்துவந்த தொடரில் அவருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை. 2024–25 ஆஸ்திரேலியச் சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியில் இடம்பிடித்த சர்ஃபராஸ் கானுக்கு, ஒரு டெஸ்டில் கூட ஆடும் லெவனில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அடுத்ததாக, இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாக இந்தியா ஏ அணிக்காக இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக 92 ரன்கள் எடுத்தார். ஆனாலும், டெஸ்ட் அணியில் அவருக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. கடைசியாக கடந்த ஆகஸ்டில் நடந்த இலங்கை தொடரில், காயம் காரணமாக விலகிய சாய் சுதர்சனுக்குப் பதிலாக சர்ஃபராஸ் கான் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால், ஒரு டெஸ்டில் கூட அவருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை. இதுவரை 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சர்ஃபராஸ் கான், 37.10 சராசரியில் 1 சதம், 3 அரைசதங்கள் எடுத்துள்ளார். End of அதிகம் படிக்கப்பட்டது பட மூலாதாரம், Getty Images பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு தற்போதைய தலைமுறையினரில் சர்ஃபராஸ் கான் அளவுக்கு சுழற்பந்து வீச்சுக்கு எதிராக டெக்னிக் கொண்ட பேட்டர்களைப் பார்ப்பது அரிது. ஆனால், வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான பிட்ச்களில் ஸ்விங், சீம் பந்துவீச்சுக்கு எதிராக அவருடைய பாணி கைகொடுப்பதில்லை. இந்திய அணி வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்களில் அவரைப் பரிசீலிக்காததற்கு அதுவும் ஒரு காரணம் என கூறப்படுகிறது. "சர்ஃபராஸ் கான் சுழற்பந்து வீச்சைச் சிறப்பாக எதிர்கொள்ளக்கூடியவர். ஸ்வீப் ஷாட்டைத் திறம்பட ஆடுவதுடன், மணிக்கட்டுகளைப் பயன்படுத்தி, பந்தின் நீளத்தைச் சரியாகக் கணித்து, தாழ்ந்து ஆடும் திறனும் அவருக்கு உண்டு. ஜாவேத் மியாண்டட், சலீம் மாலிக் போன்ற பாகிஸ்தான் வீரர்களிடம் காணப்பட்ட சுழற்பந்துவீச்சை உணர்ந்து ஆடும் திறனை இவரிடமும் பார்க்க முடிகிறது. ஆனால், வேகப்பந்து வீச்சுக்கு எதிராக அவர் சற்று தடுமாறுவார்" என்கிறார் கிரிக்கெட் எழுத்தாளர் பரத் ராமராஜ். பேட்டிங்கின் போது கைகளை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவது சர்ஃபராஸ் கானின் டெக்னிக்கை கேள்விக்குட்படுத்துகிறது என்கிறார் பரத் ராமராஜ். "சர்ஃபராஸ் ஒரு வழக்கத்துக்கு மாறான வீரர். அவர் அதிகம் கைகளைப் பயன்படுத்துகிறார். அந்த டெக்னிக் உள்ளூரில் கைகொடுக்கும். ஆனால். பந்து அதிகமாக நகரும் SENA (தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா) நாடுகளில் கைகளை அதிகம் நம்பியிருப்பதும் எட்ஜ்களுக்கு வழிவகுக்கும்." என்கிறார் அவர். பட மூலாதாரம், Getty Images "தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் சர்ஃபராஸ் கான், இந்திய அணியின் எந்தவொரு வடிவத்திலும் ஏன் தேர்வு செய்யப்படுவதில்லை என்பது எனக்கு உண்மையிலேயே புரியவில்லை. இந்திய அணிக்காக விளையாட அவருக்கு வாய்ப்புக் கிடைத்தபோது சிறப்பாகவே செயல்பட்டுள்ளார்." என்கிறார் இந்திய அணியின் முன்னாள் வீரர் திலீப் வெங்சர்க்கார். முதல்தரக் கிரிக்கெட்டில் ரன் மெஷினாகத் திகழ்ந்த பலர், சர்வதேச கிரிக்கெட்டில் தடுமாறிய வரலாறும் உண்டு. உதாரணமாக கவுண்டி கிரிக்கெட்டில் நூறுக்கும் மேற்பட்ட சதங்களைக் குவித்த இங்கிலாந்தின் கிரேம் ஹிக், மார்க் ராம்பிரகாஷ் போன்றவர்கள் டெஸ்டில் பெரிதாக சாதிக்கவில்லை. இந்திய உள்ளூர் கிரிக்கெட்டில் ரன் குவித்த வாசிம் ஜாஃபர், ஆகாஷ் சோப்ரா போன்றவர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. பட மூலாதாரம், Getty Images சர்ஃபராஸ் கானின் டெக்னிக் மீது இந்திய அணியின் தேர்வாளர்களுக்கு சந்தேகம் இருக்கிறது என்கிறார் மூத்த கிரிக்கெட் எழுத்தாளர் ஆர்.மோகன். "முதல்தர கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக ரன்கள் குவித்தும் சர்ஃபராஸ் கானுக்கு வாய்ப்பு கிடைக்காதது துரதிர்ஷ்டம்தான். அவருடைய டெக்னிக் வெளிநாடுகளில் தாக்குப்பிடிக்காது என்று தேர்வாளர்கள் நினைக்கிறார்கள் போல. சர்ஃபராஸ் கானுக்காவது சில போட்டிகளில் வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், பெங்கால் அணிக்காக விளையாடும் ஈஸ்வரனுக்கு அது கூட கிடைக்கவில்லை." என்றார் அவர். சர்ஃபராஸை விட குறைவான சராசரி கொண்ட வீரர்களான சுதர்சன், படிக்கல் போன்றவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் குறித்து அவரிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், "முதல்தர கிரிக்கெட்டை மட்டும் வைத்து ஒரு வீரரின் திறமையை அளவிட முடியாது. அவர்கள் எந்த மாதிரியான பிட்ச்களில் ரன் குவிக்கிறார்கள் என்பதையும் தேர்வாளர்கள் பரிசீலிக்கிறார்கள். 80களில் கமல் ஜுனேஜா என்ற ஒரு பேட்டர் சீசனுக்கு 1000 ரன்களை குவிப்பார். ஆனால், தேர்வாளர்கள் அவரது பெயரை கவனத்தில் எடுத்துக் கொண்டதில்லை" என்றார். இந்திய ஏ அணியில் கூட சர்ஃபராஸ் கான் இடம்பெறாததற்கு நடைமுறைச் சிக்கல்தான் காரணமென கூறப்படுகிறது . வெளிநாடு சுற்றுப்பயணங்களின் போது டெஸ்ட் தொடருக்குத் தயாராகும் விதமாக இந்திய ஏ அணிக்காக முன்னணி வீரர்கள் விளையாடுவது வழக்கம். தற்போது நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய ஏ அணியில் ராகுல், கில், படிக்கல், பந்த் உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த சூழலில் எப்படி சர்ஃபராஸுக்கு இந்திய ஏ அணியில் வாய்ப்பு வழங்க முடியும் என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. பட மூலாதாரம், Getty Images சர்ஃபராஸ் கானுக்கு அடுத்தபடியாக, ரிங்கு சிங் தேர்வு செய்யப்படாததும் பேசுபொருளாக உள்ளது. ரிங்கு சிங், கடைசியாக விளையாடிய முதல் தர இன்னிங்ஸ்களில் 4 சதங்கள் குவித்துள்ளார். வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் ஃபினிஷர் என்று முத்திரை விழுந்ததால், அவருடைய சிவப்பு பந்துச் செயல்பாடுகள் போதிய கவனம் பெறுவதில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், வெள்ளைப்பந்து கிரிக்கெட்டிலும் அவருக்கு தற்போது வாய்ப்பு கிடைப்பதில்லை. 2026 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு அவர் இந்திய அணியில் எந்த ஃபார்மெட்டுக்கும் தேர்வு செய்யப்படவில்லை. டி20 கிரிக்கெட்டில் பேட்டிங் வரிசையில் 7, 8 ஆகிய இடங்களில் பேட் செய்ய ஒரு பந்துவீச்சு ஆல்ரவுண்டரை இந்திய அணி நிர்வாகம் விரும்புவதாலேயே ரிங்கு சிங் பெயர் பரிசீலிக்கப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது. இதே காரணத்தினாலேயே லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 52.56 சராசரி இருந்தும் ஒருநாள் அணியிலும் அவருக்கு இடம் கிடைப்பதில்லை. இந்திய அணியின் சமநிலைக்கு ஆல்ரவுண்டர்கள் அவசியம் என்ற பார்வையும் முன்வைக்கப்படுகிறது. நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்தியா வென்றதற்கு, ஆல்ரவுண்டர்களான நமன் திர், நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. அதேநேரம், டெஸ்ட் போட்டிகளுக்காகவது ரிங்கு சிங்கைப் பரிசீலிக்கலாம் என்ற கருத்தும் வலுப்பெற்று வருகிறது. ஏன் ரிங்கு சிங் பற்றி யாருமே பேசுவதில்லை என கேள்வி எழுப்புகிறார் இந்திய முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா. "இந்திய அணி நிர்வாகம் அவரை வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கான வீரராக மட்டுமே பார்க்கிறது. அப்படியிருக்க, வெள்ளைப் பந்து கிரிக்கெட்டிலும் அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்றால், டெஸ்ட் போட்டிகளில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பளித்துப் பார்க்கலாமே?" என்கிறார் அவர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை