பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் முறைகேடு: சுதந்திரமான அமைப்பு மூலம் விசாரிக்க திமுக வலியுறுத்தல்

📅 📍 Coimbatore, Tamil Nadu 🏷️ Politics ✍️ 🔗 Source: hindutamil.in (original report) ↗
பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் முறைகேடு: சுதந்திரமான அமைப்பு மூலம் விசாரிக்க திமுக வலியுறுத்தல்

சென்னை: கோவை பெரியார் அறிவுலக நூல்கள் கொள்முதல் முறைகேடு தொடர்பாக சுதந்திரமான அமைப்பைக் கொண்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை அவசியம் என்றும் திமுக வலியுறுத்தியுள்ளது. இது குறித்து திமுக முன்னாள் அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்ட அறிக்கையில், “கோவை பெரியார் அறிவுலகத்தில் இடம்பெற்றுள்ள சில நூல்கள் தவறான தகவல்களையும், பிழையான வரலாற்றையும் உள்ளடக்கியதாக இருப்பதையும், அந்தப் புத்தகங்களின் வெளியீட்டாளர்கள் மற்றும் அதன் எழுத்தாளர்களின் பெயர் மற்றும் முகவரிகள் போலியாக இருப்பதையும் எழுத்தாளர் பெருமாள் முருகன் தான் எழுதிய கட்டுரை ஒன்றில் வெளிச்சம் போட்டுக் காட்டியிருந்தார். இதை தங்களது அரசியல் அருவெறுப்புக்கு பயன்படுத்தப் பார்க்கிறது தவெக. எதற்கெடுத்தாலும் திமுகவைக் குற்றம் சொல்லியே பழக்கப்பட்ட தவெக அரசைச் சேர்ந்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும், திமுக மீது புழுதி வாரி இறைப்பதற்கென்றே செயல்படும் அக்கட்சியின் ‘வெர்ச்சுவல் அப்யூஸர்ஸ்’ கூட்டமும், வழக்கம்போல் பழியைத் தூக்கி திமுக மீது போட்டுவிடலாம் என்று செயல்பட்டனர். இதில் அதிர்ச்சியான ஆச்சர்யம் என்ன என்றால், இதுவரை சட்டம் - ஒழுங்கு, விலைவாசி உயர்வு, மின்கட்டண உயர்வு உள்ளிட்ட எந்தப் பிரச்சினைக்கும் வாய்த்திறக்காத முதல்வரும் அதிசயமாய் அறிக்கை வெளியிட்டுள்ளார், மக்களைத் திசைத் திருப்ப இது பயன்படும் என்ற நப்பாசையால்! முதல்வர் என்ற பொறுப்பில் இருந்துகொண்டு, நொடிப்பொழுதில் அரசின் அத்தனை ஆவணங்களையும் ஆய்வு செய்யும் அதிகாரத்தையும் கொண்டுள்ள விஜய், பெரியார் அறிவுலகப் புத்தகங்கள் வாங்கியது தொடர்பான சர்ச்சை வெளியானதும், அது குறித்து முறையாக ஆய்வு செய்திருக்க வேண்டும். அதை அவர் பொறுப்புடன் செய்ததாகத் தெரியவில்லை. நூலகங்களுக்கு வாங்கப்படும் நூல்கள் தரமானவையாக இருக்க வேண்டும். அவற்றில் வெளிப்படைத்தன்மை பேணப்பட வேண்டும் என ‘வெளிப்படையான நூல் கொள்முதல் கொள்கை’யை முதலில் உருவாக்கியதே திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிதான் என்பதை மறைத்துவிட்டு தவெகவினர் பரப்புவது அவதூறு மட்டுமே. கோவையில் அமையவுள்ள மாபெரும் நூலகத்தில் தரமான நூல்கள் இடபெற வேண்டும் என மதிப்புமிக்க எழுத்தாளர்களையும், கல்வியாளர்களையும் உள்ளடக்கிய நூல் பரிந்துரைக் குழுவினை கடந்த திமுக ஆட்சியில் அமைத்தோம். புத்தக முறைகேட்டை வெளிகொண்டுவந்த கட்டுரையை எழுதிய எழுத்தாளர் பெருமாள் முருகனே, அந்த நூல் பரிந்துரைக் குழுவில் இடம்பெற்றிருந்தவர்தான். தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான நூலகங்களை உருவாக்கி, இந்திய ஒன்றியமே வியந்து பார்க்கும் வகையில் அண்ணா நூற்றாண்டு நூலகம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் உள்ளிட்ட நூலகங்களை அமைத்த திமுகவின் திட்டங்களில் இதற்குமுன் இப்படிப்பட்ட குறைகள் ஏதாவது எழுந்துள்ளனவா? ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, திமுகவின் திட்டங்களைச் சிதைப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படும் தவெக ஆட்சியில் இத்தகைய செய்தி வந்திருப்பதால், இதில் உள்நோக்கம் ஏதும் உள்ளதோ, சதிச் செயல்கள் ஏதும் உள்ளனவோ என்று கருத வேண்டியிருக்கிறது. குறிப்பிட்ட புத்தகங்கள், அதனை எழுதிய எழுத்தாளர்கள், அனுமதி பெற்ற பதிப்பகங்கள் ஆகியவற்றின் பின்னணி வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டும். எனவே, வழக்கம் போல் திமுக, திமுக என்று சொல்லாமல், சுதந்திரமான அமைப்பைக் கொண்டு விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை அவசியம் என்பதே திமுகவின் நிலைப்பாடு” என்று அவர் கூறியுள்ளார். பெருமாள் முருகன் குற்றச்சாட்டு என்ன? எழுத்தாளர் பெருமாள் முருகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “கோவையில் திறக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம் என்ற பிரம்மாண்ட நூலகத்துக்காக வாங்கப்பட்ட புத்தகங்களில் ஊழல் நடைபெற்றுள்ளது. ஓர் எழுத்தாளராக நான் பார்த்த காட்சிகளின் அடிப்படையில் இந்தக் கருத்தை முன்வைக்கிறேன். இதை யார் செய்தார்கள் என்று தெரியவில்லை. பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள தமிழ் நூல்களை பார்த்தாலே கட்டாயம் ஊழல் நடைபெற்றிருப்பது தெரியவரும். தமிழகத்தில் நூற்றுக்கும் அதிகமான பதிப்பகங்கள் உள்ள நிலையில், குறிப்பாக ஒரு பதிப்பகத்தின் 2,000 புத்தகங்கள் நூலக அலமாரிகளில் வைக்கப்பட்டுள்ளன. அந்தப் புத்தகங்கள் ஒவ்வொன்றும் அதிக விலை கொண்டவையாக உள்ளன. தமிழ்ச் சூழலில் 100 பக்கங்கள் கொண்ட புத்தகத்துக்கு ரூ.150 விலை நிர்ணயிப்பார்கள். மிகவும் பிரபலமான எழுத்தாளரின் புத்தகமாக இருந்தால் ரூ.200 விலை நிர்ணயிப்பார்கள். ஆனால், இங்கு வழக்கமான விலையைவிட 5 மடங்கு அதிகமாக நிர்ணயித்துள்ளனர். ரூ.300 மதிப்புள்ள புத்தகத்துக்கு ரூ.1,500 விலை வைத்துள்ளனர். பெரும்பாலான புத்தகங்களின் விலை ரூ.1,000-க்கும் அதிகமாக உள்ளது. ஒரே பதிப்பகத்திலிருந்து சுமார் 2,000 புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன. அவை தரமானதாக இல்லை. அந்தப் புத்தகங்கள் முழுமையாக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் உருவாக்கப்பட்ட போலி நூல்களாகத் தெரிகின்றன. அவற்றை மோசடி புத்தகங்கள் என்றுதான் குறிப்பிட வேண்டியுள்ளது. அவற்றில் உள்ள தகவல்களும், தமிழ் மொழிநடையும் இயல்பாக இல்லை. அந்தப் புத்தகங்களின் ஆசிரியர்கள் இதுவரை வேறு எந்த நூல்களையும் எழுதியதாகத் தெரியவில்லை. இதில் பல லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளதாகத் தெரிகிறது. மேலும், பல புத்தகக் கட்டுகள் இன்னும் பிரிக்கப்படாமல் உள்ளன. அவற்றையும் பிரித்துப் பார்த்தால், கோடி ரூபாய்க்கும்மேல் ஊழல் நடைபெற்றிருப்பது தெரியவரும். இந்தக் கொள்முதலில் தொடர்புடையவர்கள், புத்தகங்களை விநியோகம் செய்தவர்கள், கொள்முதல் ஆணை வழங்கியவர்கள், சம்பந்தப்பட்ட பதிப்பக உரிமையாளர்கள் ஆகியோரைக் கண்டறிந்து தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை